Samsung Galaxy J2 Core 2020 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த எந்தவொரு ஆன்லைன் நிகழ்வும் இல்லை. இந்த போன் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஜே 2 கோரின் மேம்படுத்தல் மாடலாகும்.
நிறுவனம் கடந்த ஆண்டு தனது ஸ்மார்ட்போன் சீரிஸில் சில மாற்றங்களைச் செய்தது. சாம்சங் கேலக்ஸி ஜே-சீரிஸை கேலக்ஸி ஏ-சீரிஸுடன் மாற்றியது. அதன் பின்னர் ஜே-சீரிஸில் புதிய போன்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால், இப்போது திடீரென்று இந்த சீரிஸில் கேலக்ஸி ஜே 2 கோர் 2020 அறிமுகமானது ஆச்சரியமாக இருக்கிறது.
போனின் 1 ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை இந்தியாவில் ரூ.6,299 ஆகும். இந்த தொலைபேசி அதிகாரப்பூர்வ Samsung India website-ல் விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் நீலம், கருப்பு மற்றும் தங்க கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்த போனை ஐஎம்ஐ ஆப்ஷன்களுடன் மாதத்திற்கு ரூ.296.51 முதல் பட்டியலிட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, ஸ்மார்ட்போனின் விநியோகம் மே மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போன் டூயல்-சிம் (மைக்ரோ) ஸ்லாட்டைக் கொண்டது. இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் (கோ பதிப்பு) இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5 அங்குல கியூஎச்டி (540x960 பிக்சல்கள்) டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் சிப்செட்டில் வேலை செய்கிறது. இந்த போன் 1 ஜிபி ரேம் உடன் வருகிறது.
போனின் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் ஒற்றை கேமரா உள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.
கேலக்ஸி ஜே 2 கோரில் (2020)-ல் 16 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதனை பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபியாக அதிகரிக்க முடியும். ஸ்மார்ட்போனில் 2,600 எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி உள்ளது. இது 12 மணிநேர வீடியோ பிளேபேக், 22 மணி நேரம் பேச்சு நேரம் மற்றும் 91 மணிநேர ஆடியோ பிளேபேக் ஆகியவற்றை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.
இணைப்பு விருப்பங்களில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 143.4x72.1x8.9 மில்லிமீட்டர் அளவு மற்றும்154 கிராம் எடையுள்ளவை. இந்த போனில் கைரேகை சென்சார் இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்