இந்தியாவில் இந்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9!

இந்தியாவில் இந்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9!

சாம்சங் கேலக்ஸி A9(2018)ஸ்மார்ட்போனானது 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் மாடல்களில் இந்தியாவில் வெளிவருகிறது.

ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி A9(2018) இரண்டு வேரியண்டுகளில் வெளியாகிறது.
  • குவாட் கேமரா கொண்ட சாம்சங்கின் முதல் ஸ்மார்ட்போன்.
  • நடுத்தர மாடல்களான ஒன்பிளஸ் 6T போன்ற ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட
விளம்பரம்

சாம்சங் கேலக்ஸி A9(2018)ஸ்மார்ட்போன் இந்த மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக உலகில் முதன் பின்பக்கம் குவாட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது. மேலும், அதில் பின்புறம் 4 தனி தனி கேமராக்களை கொண்டுள்ளது.

இந்த கேலக்ஸி A9 ஆனாது, முதன்முறையாக கேலக்ஸி ஏ சிரிஸில் 3 கேமரா கொண்டு அண்மையில் வெளிவந்த கேலக்ஸி ஏ7 வரிசையில் இதுவும் இடம்பெற்றுள்ளது. கேலக்ஸி A9 போனின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் அதன் டிஸ்பிளேயே, 18.5:9 அக்சப்ட் ரேசியோ, 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. பின்பக்கம் 3டி கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது நடுத்தர மாடல்களான ஒன்பிளஸ் 6T போன்ற ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஐஏஎன்எஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A9 விலையானது 599 யூரோ (தோராயமாக ரூ.51,300 ஆகும்). சாம்சங் A9 னின் இந்திய விலை வெளியிடப்படவில்லை. பபூள்கம் பிங், கேவியர் பிளாக், லேமோனேட் ப்ளூ, உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
 

 

சாம்சங் கேலக்ஸி A9 விவரக் குறிப்புகள்

டுயல் சிம் (நானோ) கொண்ட கேலக்ஸி A9 (2018) ஸ்மாட்ர்போன் ஆண்டுராய்டு 8.0 ஓரியோவில் இயங்குகிறது. 6.3 ஃபுல் ஹெச்டி + (1080x2220)பிக்ஸல்ஸ், சூப்பர் அமோல்ட் பேனல் 18.5:9 அக்சப்ட் ரேசியோ கொண்டுள்ளது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 660, 4 கோர் 2.2GHz மற்றும் 4 கோர் 1.8GHz கொண்டுள்ளது. மேலும் இது 6 ஜிபி அல்லது 8 ஜிபி வேரியன்டிலும் கிடைக்கிறது.
 

 

இதில் 24 எம்.பி சென்சார், f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் 2x ஆப்டிக்கல் சூமிங் கொண்டுள்ளது. கடைசியாக 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. முன்பக்க செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டுள்ளது. இதில் பேஸ்லாக் தொழில்நுட்பம் உள்ளது. பின் பக்கம் கைரேகை சென்சார் உள்ளது.

கேலக்ஸி A9 (2018) ஸ்மார்ட்போனானது 128ஜிபி இன்பில்ட் மெமரி கொண்டுள்ளது. மேலும், 512 ஜிபி வரை மெமரியை SD கார்டு கொண்டு விரிவாக்கம் செய்துகொள்ளலாம். 4G வோல்ட், வை-பை 802.11 (டூயல்பேண்ட், 2.4GHz மற்றும் 5GHz),ப்ளூடுத் v5.0, யூஎஸ்பி டைப் - சி மற்றும் 3.5mm ஹெட் ஜாக் கொண்டுள்ளது. மேலும், 3,800mAh பேட்டரி கொண்ட இதில் பவர் சார்ஜிங் வசதியும் உள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good
  • Bright, vibrant screen
  • Good battery life
  • Bad
  • Underpowered for its price
  • Zoom and wide-angle cameras not useful in low light
  • Spammy notifications
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 24-megapixel
Rear Camera 24-megapixel + 10-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3800mAh
OS Android 8.0 Oreo
Resolution 1080x2220 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »