கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஸி A9(2018)ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக உலகில் முதன் பின்பக்கம் குவாட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது. மேலும், அதில் பின்புறம் 4 தனி தனி கேமராக்கள் கொண்டுள்ளது. இந்த கேலக்ஸி A9 ஆனாது, முதன்முறையாக கேலக்ஸி ஏ சிரிஸில் 3 கேமரா கொண்டு அண்மையில் வெளிவந்த கேலக்ஸி ஏ7 வரிசையில் இதுவும் இடம்பெற்றுள்ளது. கேலக்ஸி A9 போனின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் அதன் டிஸ்பிளேயே, 18.5:9 அக்சப்ட் ரேசியோ, 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. பின்பக்கம் 3டி கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A9 விலையானது 599 யூரோ (தோராயமாக ரூ.51,300 ஆகும்). மேலும் இந்த மொபைல் நவம்பரில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் சாம்சங் A9 னின் இந்திய விலை வெளியிடப்படவில்லை. பபூள்கம் பிங், கேவியர் பிளாக், லேமோனேட் ப்ளூ, உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
டுயல் சிம் (நானோ) கொண்ட கேலக்ஸி A9 (2018) ஸ்மாட்ர்போன் ஆண்டுராய்டு 8.0 ஓரியோவில் இயங்குகிறது. 6.3 ஃபுல் ஹெச்டி + (1080x2220)பிக்ஸல்ஸ், சூப்பர் அமோல்ட் பேனல் 18.5:9 அக்சப்ட் ரேசியோ கொண்டுள்ளது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 660, 4 கோர் 2.2GHz மற்றும் 4 கோர் 1.8GHz கொண்டுள்ளது. மேலும் இது 6 ஜிபி அல்லது 8 ஜிபி வேரியன்டிலும் கிடைக்கிறது.
இதில் 24 எம்.பி சென்சார், f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் 2x ஆப்டிக்கல் சூமிங் கொண்டுள்ளது. கடைசியாக 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. முன்பக்க செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டுள்ளது. இதில் பேஸ்லாக் தொழில்நுட்பம் உள்ளது. பின் பக்கம் கைரேகை சென்சார் உள்ளது.
கேலக்ஸி A9 (2018) ஸ்மார்ட்போனானது 128ஜிபி இன்பில்ட் மெமரி கொண்டுள்ளது. மேலும், 512 ஜிபி வரை மெமரியை SD கார்டு கொண்டு விரிவாக்கம் செய்துகொள்ளலாம். 4G வோல்ட், வை-பை 802.11 (டூயல்பேண்ட், 2.4GHz மற்றும் 5GHz),ப்ளூடுத் v5.0, யூஎஸ்பி டைப் - சி மற்றும் 3.5mm ஹெட் ஜாக் கொண்டுள்ளது. மேலும், 3,800mAh பேட்டரி கொண்ட இதில் பவர் சார்ஜிங் வசதியும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்