சாம்சங் கேலக்ஸி A9 (2018) மற்றும் கேலக்ஸி A7 (2018) ஆகிய போன்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சத்தமில்லாமல் இந்த விலை குறைப்பை செய்துள்ள சாம்சங், அதன் ஆன்லைன் தளத்தில் புதிய விலை விவரத்தை தரவேற்றம் செய்துள்ளது. முன்னதாக A7-க்கு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் விலை குறைப்பு செய்யப்பட்டது. அதேபோல A9-க்கு, ஏப்ரல் மாதம் விலை குறைப்பு செய்யப்பட்டது.
தற்போது சாம்சங் நிறுவன இணையதளத்தில் இருக்கும் தகவல்படி, சாம்சங் கேலக்ஸி A9 (2018)-ன், 6ஜிபி + 128ஜிபி வகையின் விலை 25,990 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் விலை 28,990 ரூபாயாக இருந்தது. அதேபோல 8ஜிபி + 128ஜிபி வகையின் விலை 28,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய விலை 31,990 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சாம்சங் நிறுவனம் A9-ஐ, 36,990 ரூபாய்க்கு அறிமுகம் செய்தது.
சாம்சங் கேலக்ஸி A7 (2018)-ன், 6ஜிபி + 64ஜிபி வகையின் விலை 15,990 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் விலை 18,990 ரூபாயாக இருந்தது. அதேபோல 6ஜிபி + 128ஜிபி வகையின் விலை 19,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய விலை 22,990 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சாம்சங் நிறுவனம் A7-ஐ, 23,990 ரூபாய்க்கு அறிமுகம் செய்தது.
இந்த புதிய விலை குறைப்பு சாம்சங் ஆன்லைன் தளம், பேடிஎம் மால், அமேசான் உள்ளிட்ட தளங்களுக்குப் பொருந்தும் எனத் தெரிகிறது. ஆனால், ஃப்ளிப்கார்ட்டில் இது குறித்து எந்த தகவலும் இல்லை.
சாம்சங் கேலக்ஸி A7 மற்றும் A9 ஆகிய இரு போன்களும் நடுத்தர பட்ஜெட் வகையைச் சேர்ந்தவை. சாம்சங் கேலக்ஸி A7-ல், 6 இன்ச் முழு எச்.டி+ ஸ்க்ரீனும், சாம்சங் கேலக்ஸி A9-ல், 6.3 இன்ச் முழு எச்.டி+ ஸ்கீரீனும் உள்ளன. இரண்டு போன்களும் ஆக்டா-கோர் எஸ்.ஓ.சி-யால் பவரூட்டப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி A9-ல், குவாட் கோர் கேமரா செட்-அப் உள்ளது. சாம்சங் கேலக்ஸி A7-லோ மூன்று பின்புற கேமரா வசதிதான் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்