புது அப்டேட் பெறும் Samsung Galaxy A51...! - அப்டேட்டில் என்னவெல்லாம் இருக்கு...?

புது அப்டேட் பெறும் Samsung Galaxy A51...! - அப்டேட்டில் என்னவெல்லாம் இருக்கு...?

Samsung Galaxy A51 டிசம்பரில் அதிகாரப்பூர்வமாகச் சென்று கடந்த மாதம் இந்தியா வந்தடைந்தது

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy A51-ன் அப்டேட்டில் A515FXXU1ASL6 உருவாக்க எண் உள்ளது
  • இந்த அப்டேட் 223.98MB அளவு & இப்போது நிலையான சேனல் வழியாக கிடைக்கிறது
  • சில சந்தைகளில் Galaxy A51 யூனிட்ஸ் ஏற்கனவே டிசம்பர் பேட்சை இயக்குகின்றன
விளம்பரம்

கேமரா மேம்பாடுகளைக் கொண்டுவரும் சில சந்தைகளில் Galaxy A51-க்கான புதிய மென்பொருள் அப்டேட்டை சாம்சங் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நினைவுகூர, Galaxy A51 கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அதிகாரப்பூர்வமாகச் சென்று ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய மென்பொருள் அப்டேடின் சேஞ்ச்லாக், கேமரா நிலைத்தன்மை மேம்பாட்டைக் குறிப்பிடுகிறது. கூடுதலாக, இந்த அப்டேட் டிசம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அப்டேட்டை வெளியிடப்பட்ட ஐரோப்பிய சந்தைகளில் Galaxy A51-க்கு கொண்டு வருகிறது. இருப்பினும், சேஞ்ச்லாக் எந்த புதிய அம்சங்களின் வருகையையும் குறிப்பிடவில்லை.

SamMobile-ன் அறிக்கையின்படி, சமீபத்திய மென்பொருள் அப்டேட் A515FXXU1ASL6 என்ற உருவாக்க எண்ணைக் கொண்டுள்ளது. இது தற்போது பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், போலந்து, ஸ்லோவேனியா, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள Galaxy A51 பயனர்களுக்கு கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. Galaxy A51 அறிமுகப்படுத்தப்பட்ட பிற சந்தைகளில் ரோல்அவுட் எப்போது தொடங்கும் என்று Samsung-ல் இருந்து எந்த வார்த்தையும் இல்லை. நீங்கள் இன்னும் OTA அறிவிப்பைப் பெறவில்லை எனில், Settings app-ன் மென்பொருள் அப்டேட் பிரிவில் அதன் கிடைக்கும் தன்மையை மேனுவலாக சரிபார்க்கலாம். இந்த அப்டேட் 223.98MB அளவு மற்றும் இப்போது நிலையான OTA சேனல் வழியாக வெளியிடப்படுகிறது.

போனில் பழைய பாதுகாப்பு பதிப்பை இயக்கிய சந்தைகளில் மட்டுமே இந்த அப்டெட்டை வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. ஜனவரி மாதத்தில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியா போன்ற சந்தைகளைப் பொறுத்தவரை, Galaxy A51 ஏற்கனவே டிசம்பர் ஆண்ட்ராய்டு பேட்ச் இயங்கிக் கொண்டிருந்தது, இப்போது ஜனவரி பாதுகாப்பு பேட்சைப் பெறுவதற்கான வரிசையில் உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அப்டேட் கேமரா நிலைத்தன்மை மேம்பாட்டை மட்டுமே கொண்டுவருகிறது. ஆனால், இது பொதுவாக முழு செயலியைப் பற்றியதா அல்லது அதன் வீடியோ மற்றும் பட உறுதிப்படுத்தல் திறன்களைப் பற்றியதா என்பதைக் குறிப்பிடவில்லை. நீங்கள் Galaxy A51-ன் தகுதிகள் மற்றும் குறைபாடுகளை அறிய எங்கள் ஆழ்ந்த மதிப்பாய்வைப் பார்க்கலாம்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Clean, feature-rich software
  • Good battery life
  • Bad
  • Biometric authentication isn’t very quick
  • Underwhelming performance for the price
  • Average low-light camera performance
Display 6.50-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy A51, December Security Patch
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »