Samsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு! கேஷ்பேக் ஆஃபரும் அறிவிப்பு!!

Samsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு! கேஷ்பேக் ஆஃபரும் அறிவிப்பு!!

சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போன் கடந்த ஜனவரி மாதம் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியன்ட் 23,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஹைலைட்ஸ்
  • கேலக்ஸி A51 8GB ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது
  • 6ஜிபி ரேம் வேரியன்டின் விலை ரூ.1,251 குறைக்கப்பட்டுள்ளது
  • HSBC, SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை
விளம்பரம்

சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்ததையடுத்து, ஸ்மார்ட்போன்களுக்கான விலை ஏகிறியது. சாம்சங், ரெட்மி, ஒப்போ, விவோ, ஆப்பிள் என அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களின் விலை கடுமையாக உயர்ந்தது. 

அந்த வகையில், சாம்சங்கின் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போன் கடந்த ஜனவரி மாதம் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியன்ட் 23,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், ஜிஎஸ்டி விலை உயர்வுக்குப் பிறகு இதன் விலை 25,250 ரூபாயாக உயர்ந்தது. 

இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போனின் விலை ஜிஎஸ்டி.,க்கு முன்பிருந்த விலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 25,250 ரூபாயிலிருந்து 23,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல், 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி A51 ஸ்மார்ட்போன் மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை 27,999 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 25,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், HSBC மற்றும் SI வங்கி வாடிக்கையாளர்களுக்கு 1,500 ரூபாய் கூடுதலாக கேஷ் பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது. மேற்கண்ட சலுகைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் மட்டுமே ்அமலில் இருக்கும் என்று சாம்சங் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி A51 சிறப்பம்சங்கள்:

திரை அளவு: 6.5 இன்ச்
டிஸ்பிளே சூப்பர் அமோலேட் டிஸ்பிளே
பிராசசர்: ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC
ஸ்டோரேஜ்: 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி

கேமரா:
பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் (குவாட்) உள்ளன. அவை 48MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5MP மேக்ரோ கேமரா, 5MP டெப்த் கேமரா. இதே போல் முன்பக்கத்தில்,32 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் சிறப்பம்ங்கள்: 
4,000mAh சக்தி கொண்ட பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜர், 4ஜி நெட்வொர்க், வைஃபை, ஜிபிஎஸ், USB டைப் சி போர்ட், இன் டிஸ்பிளே விரல் ரேகை சென்சார்.


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Clean, feature-rich software
  • Good battery life
  • Bad
  • Biometric authentication isn’t very quick
  • Underwhelming performance for the price
  • Average low-light camera performance
Display 6.50-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »