Samsung Galaxy A51 மற்றும் Samsung Galaxy A71 ஆகியவை கடந்த மாதம் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், அந்த போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy A51 ஜனவரி இறுதிக்குள் நாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், Galaxy A71 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் ஒரு வெளியீட்டைக் காணும் வேண்டும் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள நிறுவன இணையதளத்தில் இந்த போன்கள் ஏற்கனவே உள்ளன.
91Mobiles-ன் அறிக்கை Samsung Galaxy A51 இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்றும், Samsung Galaxy A71 பிப்ரவரி நடுப்பகுதியில் விற்பனைக்கு வரும் என்றும் கூறுகிறது. மறுபுறம் Mobile Indian பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் போன்கள் அறிமுகமாகும் என்று கூறுகிறது. மேலும், இந்த போன்களின் விலை ரூ. 30,000-க்கு கீழ் இருக்கும். இது முந்தைய அறிக்கைகள் இந்தியாவில் Galaxy A51 ரூ. 22,990-யாக விலையிடப்படும் என்று பரிந்துரைக்கின்றன. Galaxy A71-ஐப் பொறுத்தவரை, இந்தியாவில் ரூ. 29,990 விலைக் குறியீட்டுடன் வரும் என்று கூறப்படுகிறது.
நிறுவனத்தின் தளம் ஏற்கனவே இரண்டு போன்களின் வருகையை கிண்டல் செய்து வருகிறது, மேலும் ‘Notify Me' பொத்தானை நேரலையாக்கியுள்ளது. Samsung Galaxy A51, 64GB மற்றும் 128GB ஸ்டோரேஜ் பதிப்புகளுடன் 4GB, 6GB மற்றும் 8GB RAM ஆப்ஷன்களில் கிடைக்கும். இது Prism Crush Black, White, Blue மற்றும் Pink கலர் ஆப்ஷ்னகளில் வருகிறது. மறுபுறம், Galaxy A71, Prism Crush Black, White, Blue மற்றும் Pink கலர் வேரியண்டுகளில் வரும். மேலும், இது 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் 6GB மற்றும் 8GB RAM வேரியண்டுகள் வழங்கப்படும்.
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A51, One UI 2.0 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Infinity-O டிஸ்பிளெ, octa-core SoC மற்றும் 48-megapixel முதன்மை சென்சார், 12-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் இரண்டு 5-megapixel சென்சார் அடங்கிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, Galaxy A51, 32-megapixel சென்சாரைக் கொண்டுள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A71-ம் One UI 2.0 உடன் Android 10-ல் இயங்குகிறது. இருப்பினும், இது 6.7-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Infinity-O டிஸ்பிளே, octa-core SoC மற்றும் 64-megapixel முதன்மை சென்சார், 12-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் இரண்டு 5-megapixel சென்சார் அடங்கிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 32-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy A71, Galaxy A51 Price in India Tipped, Said to Launch Next Week
Samsung Galaxy A51, Galaxy A71 With Infinity-O Display, Quad Rear Cameras Launched
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்