பல சிறப்பம்சங்களுடன் ஐரோப்பாவில் அறிமுகமாகிய சாம்சங் 'கேலக்ஸி ஏ40'!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 20 மார்ச் 2019 15:57 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் ரூ.19,500க்கு மதிப்பிடப்படுகிறது.
  • உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
  • ஆண்டுராய்டு பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருளை இந்த போன் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் சாம்சங் எக்னாஸ் 7885 SoC மற்றும் 4ஜிபி ரேமையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மிகவும் எதிர்பார்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி ஏ40  தற்போது நெதர்லாந்தில் அறிமுகமாகியுள்ளது. பல தரப்பட்ட தகவல் கசிவுகளுக்குப் பிறகு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கறுப்பு, நீலம், கோரல் மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த போன் வெளியாக வாய்புள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ40 விலை:

நெதர்லாந்தில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் 249 யூரோ. அதாவது ரூ.19,500க்கு மதிப்பிடப்படுகிறது. சாம்சங் சார்பில் வெளியான தகவலின்படி, வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி பாங்காக், மிலான் மற்றும் சாவ் பாவுலோ நகரங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ40 அறிமுகமாகவுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் அமைப்புகள்:

வெளியாகியுள்ள தகவல்படி, சாம்சங் கேலக்ஸி ஏ40 இரண்டு சிம்கார்டு ஸ்லாட்களை கொண்டிருக்கும் எனப்படுகிறது. ஆண்ட்ராய்டு 9 பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் ஆமொலெட் இன்ஃபினிட்டி திரையையும் பெற்றுள்ளது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் சாம்சங் எக்னாஸ் 7885 SoC மற்றும் 4ஜிபி ரேமையும் பெற்றுள்ளது.

இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன், அதில் முக்கியமான 16 மெகா பிக்சல் சென்சாரை கொண்டுள்ளது. செல்ஃபி கேமராவைப் பொறுத்தவரை இந்த போனில் 25 மெகா பிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போனைப் பொருத்தவரை 64ஜிபி சேமிப்பு வசதி இடம் பெற்றுள்ளது. டைப் சி சார்ஜர், 3.5mm ஹெட்போன்ஸ் ஜாக் மற்றும் 3,100mAh பேட்டரி போன்ற பல முக்கிய வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரியல்மி 16T 5G விமர்சனம்: மலிவான விலையில் ப்ரோ மாடல் போன்ற தோற்றம்
  2. மோட்டோ ஜி37 பவர் vs ஒப்போ K14x vs சாம்சங் கேலக்ஸி M17 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  3. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ கேமரா விபரங்கள் உறுதி செய்யப்பட்டன; மூன்று வண்ண விருப்பங்களில் வரும்
  4. 55dB ANC, 50 மணிநேர பேட்டரியுடன் ரியல்மி பட்ஸ் ஏர் 8 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்
  5. 1.97-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 20 நாட்கள் பேட்டரியுடன் ரியல்மி வாட்ச் S5 இந்தியாவில் அறிமுகம்
  6. ரியல்மி 16T இந்தியாவில் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8,000mAh பேட்டரியுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  7. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
  8. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விமர்சனம்: கிட்டத்தட்ட ‘ப்ரோ’ தரத்திலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்
  9. சியோமி ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ அறிமுகம்: 1.74-இன்ச் AMOLED திரை, 21 நாட்கள் பேட்டரி ஆயுள்
  10. ஒப்போ ஃபைண்ட் X9s, விவோ X300 FE, ஒன்பிளஸ் 15: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.