வெளியாகும் தேதிக்கு முன்னரே கசிந்த கேலக்ஸி ஏ40யின் விலை!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 5 மார்ச் 2019 17:39 IST
ஹைலைட்ஸ்
  • ஐரோப்பிய நாடுகளில் வெளியாகும் சாம்சங் ஏ40!
  • இந்தியாவில் வெளியாக வாய்புள்ளதாக தகவல்!
  • போனின் சப்போர்ட் பேஜ் தற்பொது லைவ் செய்யப்பட்டுள்ளது!

சாம்சங் ஏ40 வரும் ஜூன் மாதத்திற்குள் ஐரோப்பாவில் வெளியாகும்

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான சாம்சங்கின் 'கேலக்ஸி ஏ' தயாரிப்புகள் (கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50) தொடர்ந்து தற்பொது சாம்சங் கேலக்ஸி ஏ40 உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதைப் பற்றிய அறிவுப்புகள் ஐரோப்பிய நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில் அதன் விலை பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.

அத்துடன் இந்தப் புதிய மாடல் ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்தத் தயாரிப்புகள் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகின்றது.

கசிந்துள்ள தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ40, ரூ.20,000 மதிப்பில் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன் வெளியாகும் தேதி இன்னும் அறியப்படாத நிலையில் வரும் ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் எனப்படுகிறது.

ஜெர்மனியில் இருக்கும் இணையதளங்களில் வெளியான தகவல்படி, இந்த புதிய கேலக்ஸி ஏ40 எக்ஸ்னாஸ் 7885 எஸ்.ஓ.சி, 4 ஜிபி ரேம் மற்றும் அண்ட்ராய்டு பையில் இயங்குவதாக தகவல் கசிந்துள்ளது. வெளியாகும் தேதி இன்னும் அறியப்படாத நிலையில் யூகே, போலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் வெளியாகவுள்ளது.

கேலக்ஸி ஏ40-ஐப் பொறுத்தவரை 'ஸ்லைடிங் கேமரா'-க்களை கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் கேமராவின் இடத்தை அறிந்து, அது செல்ஃபி கேமராவாக செயல்பட வேண்டுமா அல்லது பின்புற கேமராவாக இருக்க வேண்டுமா என தீர்மானித்துக் கொள்ளலாம்.

6.41 இஞ்ச் திரை, ஸ்னாப்டிராகன் 710  மற்றும் அண்ட்ராய்டு பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருளை கொண்டுள்ளது. மேலும் 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் மற்றும் 128 சேமிப்பு வசதியை இந்த போன் கொண்டிருக்க வாய்ப்புள்ளது

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy A40, Samsung
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  2. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  3. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
  4. அறிமுகத்திற்கு முன் கசிந்தது விவோ S2 விலை, முழு விவரங்கள் மற்றும் வடிவமைப்பு!
  5. கூகிள் இந்தியாவில் 'ஆஸ்க் கூகிள் பே' என்ற ஜெமினி AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
  6. Paytm தனது செயலியில் பகிரப்பட்ட குழுச் செலவுகளுக்காக பில்களைப் பிரிக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
  7. ஜெமினியால் இப்போது கூகிள் டாக்ஸில் உள்ள கருத்துகளைப் படிக்கவும்,சுருக்கவும்,பதில்களை வரைவு செய்யவும் முடியும்
  8. சாம்சங் கேலக்ஸி S26 FE போனின் சார்ஜிங் வேகத்தில் மாற்றம் இருக்காது என சான்றிதழ் தளம் மூலம் தெரியவந்துள்ளது!
  9. வாட்ஸ்அப் வெப்பில் குரூப் வீடியோ கால் வசதி அறிமுகம்; குவிக்HD, சத்தம் குறைப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
  10. விவோ T5x 5G ஃபியூஷன் ரெட் வண்ண மாடல் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.