அதிரடி விலைக்குறைப்பில் Samsung Galaxy A20s...! 

அதிரடி விலைக்குறைப்பில் Samsung Galaxy A20s...! 

Samsung Galaxy A20s கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஹைலைட்ஸ்
  • Galaxy A20s 3GB RAM வேரியண்டிற்கு கடந்த மாதம் விலை குறைப்பு கிடைத்தது
  • 4GB RAM கொண்ட போன் முன்பு ரூ.13,999-க்கு கிடைத்தது
  • Samsung Galaxy A20s மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது
விளம்பரம்

இந்தியாவில் Samsung Galaxy A20s-ன் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. Galaxy A20s-ன் 4GB RAM வேரியண்டில் சமீபத்திய விலை குறைப்பு பொருந்தும். கடந்த மாதம், சாம்சங், Galaxy A20s-ன் 3GB RAM மாடலின் விலையை ரூ.10,999-யாக குறைத்தது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.11.999-க்கு அறிமுகமானது.


இந்தியாவில் Samsung Galaxy A20s-ன் விலை: 

இந்தியாவில் Samsung Galaxy A20s-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.12,999-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4GB RAM மாடலின் விலை ரூ.13,999-க்கு கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகமானது. சமீபத்திய விலைக் குறைப்பு Samsung India online store-ல் தெரியும். இது Amazon India வலைத்தளத்திலும் பிரதிபலிக்கிறது. மேலும், மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் நாட்டில் உள்ள ஆஃப்லைன் கடைகள் மூலமாகவும் தனது இருப்பை பரிந்துரைத்துள்ளார்.

விலைக் குறைப்பு குறித்த தெளிவுக்காக, கேஜெட்ஸ் 360, Samsung India-வை அணுகியுள்ளது, மேலும் நிறுவனம் பதிலளிக்கும் போது இந்த இடத்தை புதுப்பிக்கும்.

Galaxy A20s-ன் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் மாடலின் விலையை சாம்சங் குறைத்த சில வாரங்களிலேயே புதிய விலை குறைப்பு வருகிறது. இந்த போன் நாட்டில் ரூ.11,999-க்கு அறிமுகமானது. ஆனால் அதன் விலை ரூ.10,999 ஆகும்.


Samsung Galaxy A20s-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A20s, Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.5-inch HD+ (720x1,560 pixels) Infinity-V டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 450 SoC-யால் இயக்கப்படுகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் f/1.8 லென்ஸுடன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், ultra-wide லென்ஸுடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் depth sensing-க்கு 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போன் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது.

சாம்சங், 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை Galaxy A20s-க்கு வழங்குகிறது. இதனை, microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்கள் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. தவிர, 163.3x77.5x8.0mm அளவீட்டையும், 183 கிராம் எடையையும் கொண்டுள்ளது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »