விற்பனைக்கு வெளியாகும் சாம்சங் கேலக்ஸி ஏ20! தெரிந்துகொள்ள வேண்டியவை!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 8 ஏப்ரல் 2019 13:24 IST
ஹைலைட்ஸ்
  • ஆன்லையின் மற்றும் ஆஃப்லையின் கடைகளில் இந்த தயாரிப்பு விற்பனை செய்யப்படுகி
  • கருப்பு, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த சாம்சங் தயாரிப்பு வெளியீடு!
  • ரூ.12,490 முதல் விற்பனைக்கு வெளியாகும் என தகவல்.

ரெட் நோட் 7 ப்ரோ தயாரிப்புக்கு போட்டியாக களமிறங்கும் சாம்சங்கின் இந்த தயாரிப்பு1

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ20 இந்தியாவில் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வெளியாகிறது. இந்த கேலக்ஸி ஏ ரக போன்கள் 2019ம் ஆண்டின் சிறப்பு ஸ்மார்ட்போன் தயாரிப்புகளாக வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ10, ஏ30, மற்றும் ஏ50 வகை போன்களின் வரிசையில் இந்த போனும் இந்திய சந்தையில் இடம் பிடித்துள்ளது. முக்கிய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகிளல் இந்த தயாரிப்பு இன்று வெளியாகுகிறது.

சாம்சங்கின் இந்த தயாரிப்பு  ரெட்மி நோட் 7க்கு போட்டியாக விற்பனை சாதனை படைக்கும் என கருதப்படுகிறது. இந்த தயாரிப்பில் 4,000 மில்லி ஆம்பியர் பேட்டரி, சி டைப் சார்ஜர் மற்றும் 15W வேகமாக சார்ஜ் செய்யும் வசதி போன்ற பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சாம்சங் கேலக்ஸி ஏ20-யின் இந்திய விலை:

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ20ன் விலை 12,490 ரூபாய். இதன் மெமரி 3GB + 32GBயாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கறுப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இந்த தயாரிப்பு வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் ஆன்லைன் விற்பனைக்கு வெளியாகுகிறது . எந்த விதமான அறிமுக சலுகையையும் இந்த சாம்சங் தயாரிப்புக்கு அறிவிக்கவில்லை. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ20 ரஷ்யாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது கூடுதல் தகவல்.

சாம்சங் கேலக்ஸி ஏ20 சிறப்பம்சங்கள்:

Advertisement

சாம்சங் கேலக்ஸி ஏ20 ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தில் இயங்குகிறது. வாட்டர் ப்ரூஃபுடன் கூடிய  6.4 இன்ச் ஹச்.டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே. 1.6GHz ஆக்டகோர் Exynos 7884 ப்ராஸசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  32 ஜிபி உள்ளக மெமரியும், 512 ஜிபி இணைக்கப்படும் மெமரியும் கொண்டுள்ளது. 

செல்ஃபி கேமரா 8 மெகா பிக்ஸலுடனும், பின்பக்கத்தில் உள்ள இரு கேமராக்கள் முறையே 13 மற்றும் 5 மெகா பிகஸலுடன் இயங்குகின்றன. 

பையோமெட்ரிக் சென்சார், 4000 மில்லி ஆம்பியர் பேட்டரி, சி டைப் சார்ஜர் என வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.