Photo Credit: Samsung
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy A16 4G, Samsung Galaxy A16 5G செல்போன் பற்றி தான்.
Samsung Galaxy A16 செல்போன் சீரிஸ் பற்றிய லீக் தகவல்கள் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சாம்சங் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Samsung Galaxy A16 செல்போன் தொடர் 6 வருடங்களுக்கு தடையில்லாத Software update மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டை பெறுமென்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Saminsider தளத்தில் வெளியான தகவல்படி, Samsung Galaxy A16 4G மற்றும் Galaxy A16 5G ஆகியவை 6.7-இன்ச் முழு-HD+ (2,340 x 1,080 பிக்சல்கள்) Super AMOLED டிஸ்பிளேவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதுள்ள 6.5 இன்ச் திரைகள் கொண்ட கேலக்ஸி ஏ15 போன்களை விட இது பெரிய டிஸ்ப்ளே பெறும் என தெரிகிறது.
Galaxy A16 4G மீடியாடெக் ஹீலியோ G99 மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy A16 5G ஆனது Exynos 1330 SoC சிப்செட் பெறும். 5G மாடல் செல்போனில் மைக்ரோ SD கார்டு வழியாக 1.5TB வரை மெமரியை அதிகப்படுத்த முடியும். 4G மாடல் 1TB வரை மட்டுமே சப்போர்ட் செய்யும் என்று கூறப்படுகிறது.
சிப்செட் மற்றும் நீட்டிக்கப்பட்ட மெமரி தவிர Samsung Galaxy A16 செல்போன்களில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இருக்கும். மற்ற எல்லா சாம்சங் ஸ்மார்ட்போன்களைப் போலவே இவை ஆண்ட்ராய்டு அடிப்படையிலான OS மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா பொறுத்தவரையில் Samsung Galaxy A16 ஃபோன்களின் 4G மற்றும் 5G வகைகளில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா இருக்கிறது. இதனுடன் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா யூனிட் இருக்கலாம். முன் பக்கம் 13-மெகாபிக்சல் கொண்ட சென்சார் கேமரா இருக்கும் என கூறப்படுகிறது.
டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.3, GPS மற்றும் USB Type-C போர்ட்கள் ஆகியவை உள்ளது. 5G மாடல் NFC சப்போர்ட் செய்யும். தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்காக IP54 மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வருகிறது. பாதுகாப்பிற்காக, Galaxy A16 5G ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்