Photo Credit: Sammobile
Samsung Galaxy A11 அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டதாக கருதப்படுகிறது. மேலும், இந்த போன் 4,000mAh பேட்டரி, மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு Galaxy A சீரிஸில் வெளியிடப்பட்ட போன்களின் பெரும் எண்ணிக்கையாக இருக்கப்போகிறது. மேலும், Samsung Galaxy A11 நுழைவு நிலை வெளியீட்டாக நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
மாதிரி எண் SM-A115F உடன் Samsung Galaxy A11, FCC-யில் காணப்பட்டது. Samsung Galaxy A10-ன் முன்னோடிக்கு இணையான, வரவிருக்கும் போன் 4,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமான தகவல் என்றாலும், Galaxy A11-ன் பின்புற வடிவமைப்பு சட்டகத்தைக் காண்பிக்கும் ஓவியத்தில் கண்களைக் கவரும் பிட் உள்ளது. Galaxy A11 பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது. Galaxy A10-ல் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாகும். இது ஒரு பின்புற கேமராவை மட்டுமே கொண்டிருந்தது. பின்புறத்தில், மூன்று கேமராக்கள் செங்குத்தாக சீரமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரத்தியேகங்கள் தற்போது தெரியவில்லை.
பின்புறத்தில் பின்புற கைரேகை சென்சார் மற்றும் 3.5mm audio jack-ன் ஒருங்கிணைப்பில் மேல் குறிப்புகளில் ஒரு சிறிய உள்தள்ளலையும் ஸ்கெட்ச் வெளிப்படுத்துகிறது. இது தவிர, FCC பட்டியல் வெளிப்படுத்துவதில் வேறு எதுவும் இல்லை. இந்த பட்டியலை முதலில் சாம்மொபைல் கண்டறிந்தது.
சமீபத்திய கீக்பெஞ்ச் பட்டியலின் (recent Geekbench listing) அடிப்படையில், Samsung Galaxy A11 ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குவதற்கும், ஸ்னாப்டிராகன் 625 SoC-யால்ல் இயக்கப்படுவதற்கும், 2 ஜிபி ரேம் பேக் செய்வதற்கும் முனைகிறது. Samsung Galaxy A11 பற்றிய முந்தைய அறிக்கை, குறைந்தது 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்கும் என்று தெரிவிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, போனின் வெளியீட்டு தேதியில் இதுவரை எந்த வார்த்தையும் இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்