இந்தியாவில் வெளியானது Samsung Galaxy A71...! 

இந்தியாவில் வெளியானது Samsung Galaxy A71...! 

Samsung Galaxy A71, 20:9 aspect ratio கொண்ட Infinity-O டிஸ்பிளேவுடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Galaxy A70-க்கு அடுத்தபடியாக Samsung Galaxy A71 உள்ளது
  • இந்த போன் பல கலர் ஆப்ஷன்களில் வருகிறது
  • Samsung Galaxy A71, octa-core SoC-யால் இயக்கப்படுகிறது
விளம்பரம்

Galaxy A70-க்கு அடுத்தபடியாக Samsung Galaxy A71 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சாம்சங் போன் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. சாம்சங் தனது தனியுரிம One UI உடன் Galaxy A71-ல் ஆண்ட்ராய்டு 10-ஐ வழங்கியுள்ளது. Galaxy A71 ஆரம்பத்தில் வியட்நாமில் இரண்டு தனித்துவமான உள்ளமைவுகளில் தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் ஸ்மார்ட்போன் ஒரே ஒரு வேரியண்டில் வருகிறது. இந்தியா பதிப்பில் உள்ளூர் பயனர்களுக்கு குறிப்பாக சில அம்சங்களும் உள்ளன. இந்த சாம்சங் போன் Vivo V17 Pro, Oppo Reno, Redmi K20 Pro மற்றும் OnePlus 7 போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.


இந்தியாவில் Samsung Galaxy A71-ன் விலை, வெளியீடு சலுகைகள்:

இந்தியாவில் Samsung Galaxy A71-ன் ஒற்றை 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.29,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Prism Crush Black, Prism Crush Silver மற்றும் Prism Crush Blue கலர் வேரியண்டுகளில் வருகிறது, இது பிப்ரவரி 24 முதல் சாம்சங் ஓபரா ஹவுஸ், சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்கள் வழியாக விற்பனைக்கு வரும்.

 Samsung Galaxy A71 டிசம்பர் மாதம் வியட்நாமில் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது, இவை இரண்டும் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy A51-ன் ஒரே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரிய்னடிற்கு ரூ.23,999-யுடன் வெளியானது.


Samsung Galaxy A71-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A71, One UI 2.0​ உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.7-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Infinity-O டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 8GB RAM உடன் octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 லென்ஸுடன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் f/2.2 ultra-wide-angl லென்ஸுடன் 12 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் ஆகியவை அடங்கும். கேமரா அமைப்பில் f/2.2 லென்ஸுடன் 5 மெகாபிக்சல் depth சென்சார் மற்றும் f/2.4 மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் f/2.2 லென்ஸுடன் உடன் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.

Samsung Galaxy A71, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் in-display fingerprint சென்சாரையும் கொண்டுள்ளது. தவிர, இந்த போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 

இந்திய பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட Galaxy A71-ல் சில ‘மேக் இன் இந்தியா' அம்சங்களையும் Samsung வழங்கியுள்ளது. காட்சி அட்டைகள், பன்மொழி தட்டச்சு மற்றும் கண்டுபிடிப்பான் எனப்படும் விரைவான கண்டுபிடிப்பு அம்சம் ஆகியவை இதில் அடங்கும். எளிதான கட்டணங்களை இயக்குவதற்கு Samsung Pay ஒருங்கிணைப்புடன் இந்த போன் வருகிறது. கடைசியாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக Samsung Knox உள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »