Samsung நிறுவனம் கடந்த புதன்கிழமை, தனது நிறுவனத்தின் A-தொடரில் புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களான Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான சாம்சங் நிறுவனத்தின் Galaxy A50 மற்றும் Galaxy A30 ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கேமரா, வடிவமைப்பு, மற்றும் சில அம்சங்களை மேம்பாடுகளை சந்தித்துள்ளது. இருப்பினும் Galaxy A30 ஸ்மார்ட்போன் full-HD+ திரை கொண்டிருக்க Galaxy A30s ஸ்மார்ட்போன் HD+ திரை கொண்டே அறிமுகமாகியுள்ளது. பளபளப்பான பின்புறத்துடன் 3D வடிவமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் பல ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனையை சந்திக்கிறது.
சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போனின் 4GB RAM அடிப்படை வகை 22,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. மற்றொரு வகையான 6GB RAM வகை 24,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.
4GB RAM + 64GB சேமிப்பு என்ற ஒரே வகையில் அறிமுகமாகியுள்ள சாம்சங் Galaxy A30s ஸ்மார்ட்போன் 16,999 ரூபாயில் விற்பனையாகவுள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஊதா (Prism Crush Violet), கருப்பு (Prism Crush Black), மற்றும் வெள்ளை (Prism Crush White) என மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது. அதுமட்டுமின்றி சாம்சங் மற்றும் அதன் பங்குதாரர்களின் ஆப்-லைன் கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் HD+ (720x1560 பிக்சல்கள்) சூப்பர் AMOLED திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்பினிட்டி V நாட்ச் திரை இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் சாம்சங் எக்சினோஸ் 7904 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டே செயல்படுகிறது. 3GB மற்றும் 4GB அளவிலான RAM, மற்றும் 32GB, 64GB மற்றும் 128GB சேமிப்பு அளவு ஆகிய வகைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 512GB அளவு வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம்.
கேமரா பற்றி பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 25 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான 123 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 4,000mAh அளவிலான பேட்டரி மற்றும் 15W அதிவேக சார்ஜர் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் இண்டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார், டைப்-C சார்ஜர் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் full-HD+ (1080x2340 பிக்சல்கள்) சூப்பர் AMOLED இன்பினிட்டி U திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் சாம்சங் எக்சினோஸ் 9611 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது. 4GB மற்றும் 6GB அளவிலான RAM, மற்றும் 64GB மற்றும் 128GB சேமிப்பு அளவு ஆகிய வகைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 512GB அளவு வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம்.
கேமரா பற்றி பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான 123 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 4,000mAh அளவிலான பேட்டரி மற்றும் 15W அதிவேக சார்ஜர் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இண்டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார், டைப்-C சார்ஜர் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்