Samsung Galaxy A30s மற்றும் Samsung Galaxy A50s போன்கள் இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன. இரண்டு சாம்சங் போன்களின் விலையும் ரூ. 3,000 வரை குறைக்கப்பட்டுள்ளன. Samsung Galaxy A50s-ன் 4GB மற்றும் 6GB RAM விருப்பங்கள் இரண்டும் திருத்தப்பட்ட விலைகளைப் பெற்றுள்ளன. புதிய விலைகள் ஆன்லைனில் பிரதிபலிக்கின்றன. மேலும், அவை ஆஃப்லைன் கடைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. Samsung Galaxy A30s இந்தியாவில் ரூ. 1,000 விலைக்குறைப்பை பெறுகிறது. அதே சமயம் Samsung Galaxy A50s, ரூ. 3,000 வரை விலைக்குறைப்பை பெறுகிறது.
இந்தியாவில் Samsung Galaxy A50s மற்றும் Galaxy A30s-ன் விலை:
Samsung Galaxy A50s-ன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 19,999-யாக திருத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்டின் அசல் விலை ரூ. 22,999, அதாவது ரூ. 3,000 விலைக்குறைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், Samsung Galaxy A50s 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் குறைக்கப்பட்ட விலை ரூ. 24,999-யிலிருந்து ரூ. 21,999-யாக உள்ளது. இங்கேயும் ரூ. 3,000 பயனுள்ள விலைக்குறைப்பு உள்ளது. புதிய விலைகள் Samsung online store, Croma, Amazon மற்றும் மற்ற தளங்களில் பிரதிபலிக்கின்றன. மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மணீஷ் காத்ரி (Manish Khatri) புதிய விலைகளை ட்வீட் செய்துள்ளார். அவை ஆஃப்லைன் சில்லறை கடைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது.
Samsung Galaxy A30s, ஒற்றை 4GB + 64GB வேரியண்டிற்கு குறைக்கப்பட்ட விலையாக ரூ. 15,999-க்கு வழங்குகிறது. இந்த போனின் அசல் விலை ரூ. 16,999. புதிய விலைகள் Samsung online store, Croma மற்றும் மற்ற தளங்களில் பிரதிபலிக்கின்றன.
கேஜெட்ஸ் 360-க்கான விலைக் குறைப்புகளை உறுதிசெய்ததோடு, திருத்தப்பட்ட விலைகள் நிரந்தரமானது என்று சாம்சங் குறிப்பிட்டுள்ளது.
Samsung Galaxy A50s-ன் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A50s One UI உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 6.4-inch full-HD+ (1080x2340 pixels) Infinity-U Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 10nm manufacturing process அடிப்படையிலான octa-core Exynos 9611 SoC-யால் இயக்கப்படுகிறது. microSD card slot உடன் (512GB வரை) 6GB RAM மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜையும் இந்த போன் பேக் செய்கிறது.
கேமரா முன்புறத்தில், சாம்சங் f/2.0 aperture உடன் 48-megapixel primary shooter உடன் மூன்று பின்புறக் கேமராவை உள்ளடக்கியது. மற்ற இரண்டு பின்புற கேமராக்களில் 8-megapixel ultra-wide-angle shooter மற்றும் 5-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். போர்டில் f/2.0 aperture உடன் 32-megapixel front shooter உள்ளது. நிறுவனம் Galaxy A50s-ல், Night Mode-ஐ சேர்த்துள்ளது. இந்த அம்சத்தைப் பெறும் முதல் A-series போனாகும்.
மற்ற விவரக்குறிப்புகளில், 15W fast சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரி, NFC ஆதரவு மற்றும் in-display fingerprint சென்சார் ஆகியவை அடங்கும்.
Samsung Galaxy A30s-ன் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A30-யும் One UI உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 6.4-inch HD+ (720x1560 pixels) Infinity-V Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் two Cortex-A73 cores clocked at 1.8GHz மற்றும் six Cortex-A53 cores clocked at 1.6GHz உடன் octa-core Exynos 7904 SoC-யால் இயக்கப்படுகிறது. கூடுதலாக, Galaxy A30s-யில் 4GB of RAM, ஆன்போர்டு ஸ்டோரேஜ் 64GB மற்றும் microSD card slot (512GB வரை) ஆகியவற்றை உள்ளடக்கியது.
இமேஜிங் திறன்களைப் பொறுத்தவரை, Samsung Galaxy A30s-ன் பின்புறத்தில் மூன்று கேமராக்களை பேக் செய்கிறது. இதில் f/1.7 aperture உடன் 25-megapixel primary shooter, 8-megapixel ultra-wide-angle கேமரா மற்றும் 5-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும்.Samsung Galaxy A30s-ன் முன்பக்கத்தில், 16-megapixel f/2.0 செல்ஃபி கேமரா உள்ளது.
மற்ற விவரக்குறிப்புக்ளில் 15W fast சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டாரி, NFC ஆதரவு மற்றும் in-display fingerprint சென்சார் ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்