சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் வரும் வியாழனன்று அறிமுகமாக உள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியான ரெட்மி நோட் 5 ப்ரோவின் வாரிசாக நோட் 6 ப்ரோ வர இருக்கிறது. ரெட்மி நோட் 6 ப்ரோ அதன் டிசைன் மற்றும் முக்கியம்சங்களில் மாறுதல்களை செய்துள்ளது. சியோமி கேமிரா செட் அப்பில் முக்கியமான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. சியோமி நிறுவனத்தின் 4 கேமிராக்களுடன் அறிமுகம் முதல் ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 6 ப்ரோ ஆகும்.
இதன் முன்புறத்தில் இரு கேமிராவும், பின்புறத்தில் இரு கேமிராவும் உள்ளன. ரெட்மி நோட் 6 ப்ரோவில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரைக் கொண்டுள்ளது. மாறுபட்ட வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் எடுக்கப்பட்ட, படத்தினைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
இந்தியாவில், ரெட்மி நோட் 6 ப்ரோவின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதன்விலை ரூ. 15,000 - ரூ.20,000 வரை இருக்குமென்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த தகவல்களை வரும் வியாழனன்று தெரியவருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 6 ப்ரோ ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவினை அடிப்படையாகக் கொண்ட MIUI 10ல் இயங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்