வெளியான ‘ரெட்மி Y3’-யின் புதிய டீசர்; பரபர தகவல்கள்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 22 ஏப்ரல் 2019 11:50 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி இந்தியா சமூக வலைதள பக்கத்தில் டீசர் பகிரப்பட்டுள்ளது
  • டீசரில் ரெட்மி Y3 போனில் டூயர் ரியர் கேமரா இருப்பது உறுதியானது
  • அதேபோல வாட்டர்-ட்ராப் நாட்ச் இருப்பதும் உறுதியாகியுள்ளது

ஏப்ரல் 24 ஆம் தேதி ரெட்மி Y3 அறிமுகம் செய்யப்பட உள்ளது

Photo Credit: YouTube/ Redmi India

ரெட்மி Y3 ஸ்மார்ட் போன், இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், அந்த போன் குறித்த ஒரு முழு நீள டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர், ரெட்மி Y3-யில் வாட்டர்-ட்ராம் டிஸ்ப்ளே நாட்ச் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதேபோல 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருப்பதும் உறுதியாகியுள்ளது. மேலும், க்ரேடியன்ட் ஃப்னீஷ் மற்றும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார்கள் போனின் பின்புறத்தில் உள்ளன. டூயல் ரியர் கேமராவும் உள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி ரெட்மி Y3 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போனில் 4000 எம்.எ.எச் பேட்டரி இருப்பதால், சார்ஜ் வெகு நேரம் நிற்கும் என்று சொல்லப்படுகிறது. 

ரெட்மி இந்தியா ட்விட்டர் பக்கத்தில், இந்த புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. முதலாவதாக போனின் உறுதித் தன்மையை காண்பிக்கும் வகையில், அது படிகளில் உருட்டி விடப்படுகின்றது. இதன் மூலம் போன் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பது நமக்கு காண்பிக்கப்படுகிறது. 

மேலும் போனின் மற்ற சிறப்பம்சங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. டெல்லியில் 24 ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் ரெட்மி Y3 வெளியிடப்படுகிறது. இந்த போனுடன் சியோமி நிறுவனம், ரெட்மி 7 போனையும் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சாம்சங்கின் 32 மெகா பிக்சல் ISOCELL ப்ரைட் GD1 இமேஜ் சென்சார்தான், ரெட்மி Y3 செல்ஃபி கேமராவுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

ரெட்மி Y3 விலை:

ரெட்மி Y2 மற்றும் Y1 ஆகிய போன்கள் முறையே 9,999 ரூபாய் மற்றும் 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே ரெட்மி Y3 போனின் விலையும் இதை ஒத்திருக்கலாம் எனப்படுகிறது. இந்த போன் ரெட்மி நோட் 7 மற்றும் ரியல்மி U1 ஆகிய போன்களுடன் சந்தையில் போட்டிபோடும். 
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Striking design
  • Good battery life
  • Dedicated microSD slot
  • Capable selfie camera
  • Bad
  • Ads and pre-installed bloatware
  • No fast charging
  • Overall performance isn’t competitive
  • Average rear cameras
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Y3, Redmi, Xiaomi, Xiaomi Redmi Y3, Xiaomi Redmi 7
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் வெளியாகும் முன்பாக ரியல்மி 16 5G பேட்டரி திறன், நிறங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளியீடு
  2. BSNLல் CNAP வசதி தொடக்கம்; நாடு தழுவிய 'காலர் ஐடி' சேவை விரைவில் எதிர்பார்ப்பு
  3. 7,500mAh பேட்டரி, இரட்டை 50-மெகாபிக்சல் கேமராக்களுடன் ஒன்பிளஸ் 15T அறிமுகமானது: விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
  4. Apple Maps Ads Coming Soon to iPhone and Other Devices: Apple's New Plan
  5. ஜூன் 8-ல் ஆப்பிளின் WWDC 2026 தொடக்கம்: AI மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் அறிமுகம்
  6. மார்ச் 25 அறிமுகத்திற்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி A37, கேலக்ஸி A57 விலை விவரங்கள் வெளியானது
  7. சீனா டெலிகாம் பட்டியலில் ஒன்பிளஸ் 15T: முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு தகவல் வெளியானது
  8. கிரின் 8000 சிப் மற்றும் 50-மெகாபிக்சல் கேமராவுடன் ஹவாய் என்ஜாய் 90 பிளஸ், என்ஜாய் 90 புரோ மேக்ஸ் அறிமுகம்
  9. AI+ நோவா 2 5G மற்றும் நோவா 2 அல்ட்ரா 5G ஏப்ரல் 9ல் இந்தியாவில் அறிமுகம்: அமைப்பு மற்றும் நிறங்கள் வெளியானது
  10. A18 சிப் மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் வசதியுடன் கூடிய ஆப்பிளின் அடிப்படை ஐபேட் 2026-ன் முதல் பாதியில் வெளியாக வாய்ப்பு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.