Photo Credit: YouTube/ Redmi India
ரெட்மி Y3 ஸ்மார்ட் போன், இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், அந்த போன் குறித்த ஒரு முழு நீள டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர், ரெட்மி Y3-யில் வாட்டர்-ட்ராம் டிஸ்ப்ளே நாட்ச் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதேபோல 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருப்பதும் உறுதியாகியுள்ளது. மேலும், க்ரேடியன்ட் ஃப்னீஷ் மற்றும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார்கள் போனின் பின்புறத்தில் உள்ளன. டூயல் ரியர் கேமராவும் உள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி ரெட்மி Y3 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போனில் 4000 எம்.எ.எச் பேட்டரி இருப்பதால், சார்ஜ் வெகு நேரம் நிற்கும் என்று சொல்லப்படுகிறது.
ரெட்மி இந்தியா ட்விட்டர் பக்கத்தில், இந்த புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. முதலாவதாக போனின் உறுதித் தன்மையை காண்பிக்கும் வகையில், அது படிகளில் உருட்டி விடப்படுகின்றது. இதன் மூலம் போன் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பது நமக்கு காண்பிக்கப்படுகிறது.
மேலும் போனின் மற்ற சிறப்பம்சங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. டெல்லியில் 24 ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் ரெட்மி Y3 வெளியிடப்படுகிறது. இந்த போனுடன் சியோமி நிறுவனம், ரெட்மி 7 போனையும் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங்கின் 32 மெகா பிக்சல் ISOCELL ப்ரைட் GD1 இமேஜ் சென்சார்தான், ரெட்மி Y3 செல்ஃபி கேமராவுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
ரெட்மி Y3 விலை:
ரெட்மி Y2 மற்றும் Y1 ஆகிய போன்கள் முறையே 9,999 ரூபாய் மற்றும் 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே ரெட்மி Y3 போனின் விலையும் இதை ஒத்திருக்கலாம் எனப்படுகிறது. இந்த போன் ரெட்மி நோட் 7 மற்றும் ரியல்மி U1 ஆகிய போன்களுடன் சந்தையில் போட்டிபோடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்