Redmi Note 8 Pro-வில் இப்படி ஒரு அப்டேட்டா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க....!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 16 நவம்பர் 2019 11:41 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 Pro, Snapdragon பதிப்பு 3C-யில் தோன்றியதாக கூறப்படுகிறது
  • Xiaomi அதன் வளர்ச்சியை முறையாக வெளிப்படுத்தவில்லை
  • Redmi K30 ஆனது MediaTek SoC உடன் வருவதாக வதந்தி பரவியுள்ளது

Redmi Note 8 Pro கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

Qualcomm Snapdragon 730G SoC உடன் புதிய மாறுபாட்டை Redmi Note 8 Pro பெறுவதாக வதந்தி பரவியுள்ளது. ரெட்மி தொலைபேசி ஆகஸ்ட் பிற்பகுதியில் சீனாவில் அறிமுகமானது மற்றும் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. quad rear cameras, full-HD+ டிஸ்பிளே மற்றும் 128GB வரை ஸ்டோரெஜ் ஆகியவற்றைக் கொண்டு, அனைத்து பெட்டிகளையும் இது டிக் செய்தாலும், ஜியோமி MediaTek chipset உடன் Redmi Note 8 Pro-வைக் கொண்டு வந்தது. Qualcomm chips உடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய சாதனையைப் பெற்ற சீன நிறுவனத்தின் விந்தையான நடவடிக்கை இது. ஆயினும்கூட, புதிய Snapdragon இயக்கும் ஸ்மார்ட்போனைத் தேடும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் Redmi Note 8 Pro-வை புதிய SoC உடன் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ட்விட்டர் கணக்கு மூலம் அறிவிக்கப்படாத முன்னேற்றங்களை பதிவிடும் Xiaomi-focussed tipster, மாதிரி எண்கள் M1912G7BE மற்றும் M1912G7BC ஆகியவற்றைக் கொண்ட ஜியோமி போன்கள் China Communications Commission (3C) தரவுத்தளத்தில் வெளிவந்துள்ளதாகக் கூறியுள்ளது. இவை Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படும் Redmi Note 8 Pro என்று கூறப்படுகிறது.

அறிக்கையிடப்பட்ட மாதிரி எண்களில் ஒன்று வதந்தியான Poco F2 என்று முன்னர் யூகிக்கப்பட்டது. ஆயினும்கூட, அந்த வளர்ச்சியை அதிகாரப்பூர்வமாக ஜியோமி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Redmi Note 8 Pro Review

Snapdragon 730G SoC உடன், டிசம்பர் மாதத்தில் Realme XT, 730G என இந்தியாவுக்கு வரவிருக்கும் Realme X2 போன்றவற்றிற்கு எதிராக Redmi Note 8 Pro-வை ஜியோமி வைக்க முடியும். எனினும், கடந்த மாதம் முதல் MediaTek Helio G90T SoC - இயக்கும் மாடலைக் கொண்ட புதிய Redmi Note 8 Pro வேரியண்ட்டை சீன நிறுவனம் இந்தியாவில் வெளியிடுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Snapdragon இயக்கும் Redmi Note 8 Pro-வுடன், மாடல் எண் M1911U2E உடன் Redmi K30 டிசம்பரில் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5G ஆதரவுடன் வருவதோடு, அதில் MediaTek SoC இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய டீஸர்களை நாங்கள் நம்பினால், dual hole-punch மற்றும் dual band 5G ஆதரவுடன் Redmi K30 வரும். ஜியோமி அடுத்த ஆண்டு Redmi K30-யின் மேம்படுத்தலாக Redmi K30 Pro-வையும் கொண்டுவர வாய்ப்புள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Note 8 Pro, Qualcomm Snapdragon 730G, Xiaomi, Redmi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus N6 விமர்சனம்: பல ஆண்டுகளில் ஒன்பிளஸின் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட போன்
  2. Oppo Reno 16: சீன மாடலைப் போலன்றி, இந்தியாவில் ஸ்னாப்டிராகன் சிப்சேட்டுடன் அறிமுகம் உறுதி
  3. iQOO Pad 5c அறிமுகம்: 10,000mAh பேட்டரி, 12.1-இன்ச் 2.8K டிஸ்ப்ளே - விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  4. Uber இந்தியாவில் 'Record My Ride', 'Ambulance Assistance' எனப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்
  5. ஜிமெயில் மற்றும் கூகுள் கீப் -இல் புதிய உரையாடல் குரல் அம்சங்களை கூகுள் சோதிக்கத் தொடங்குகிறது
  6. ஒப்போ என்கோ ஏர் 5 ப்ரோ (Oppo Enco Air 5 Pro) விமர்சனம்: சமரசமற்ற தரம், முழுமையான மதிப்பு
  7. ஒன்பிளஸ் என்6 இந்தியாவில் அறிமுகம்: 8,000mAh பேட்டரி, டைமென்சிட்டி 6360 சிப்செட் மற்றும் விலையில் வெளியீடு!
  8. சாம்சங் கேலக்ஸி A27 5G இந்தியாவில் வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடி சலுகை விவரங்கள்
  9. வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: இது என்ன, எப்படிச் செயல்படுகிறது, ஏன் முக்கியம்?
  10. அமேசான் பிரைம் டே விற்பனை: ஒன்பிளஸ் 15, பேட் 4, நோர்ட் பட்ஸ் 4 உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.