Amazon, Mi.com வழியாக மீண்டும் விற்பனைக்கு வரும் Redmi Note 8 Pro!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 18 டிசம்பர் 2019 11:18 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 Pro அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • Redmi போன் MediaTek Helio G90T SoC மூலம் இயக்கப்படுகிறது
  • Redmi Note 8 Pro நான்கு தனித்துவமான வண்ண விருப்பங்களில் வருகிறது

Redmi Note 8 Pro, 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

Redmi Note 8 Pro இன்று பிற்பகல் 12 மணிக்கு இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும். இந்த போன் Mi online store மற்றும் Amazon-ல் கிடைக்கும். 


Redmi Note 8 Pro-வின் விலை மற்றும் விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Redmi Note 8 Pro-வின் 6GB RAM 64GB வேரியண்ட் ரூ. 14,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் போனின் 6GB RAM 128GB வேரியண்ட் ரூ. 15,999-க்கு கிடைக்கிறது. அதன் top-end 8GB RAM 128GB ஸ்டோரேஜ் ரூ. 17,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும், இந்த போன் Gamma Green, Halo White மற்றும் வண்ண விருப்பங்களில் வருகிறது. 

Redmi Note 8 Pro-வின் விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கி, நாடு முழுவதும் உள்ள Amazon India மற்றும் Mi.com வழியாக நடத்தப்படும்.

Redmi Note 8 Pro-வின் விற்பனை சலுகைகளில் no-cost EMI ஆப்ஷன்ஸ் மற்றும் அமேசான் இந்தியா மூலம் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ. 1,000 மதிப்புள்ள உடனடி தள்ளுபடி ஆகியவற்றை வழங்குகிறது. Mi.com மூலம் போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ் தள்ளுபடியைப் பெறலாம், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI ஆப்ஷன்களுக்கு ரூ. 1,000 உடனடி தள்ளுபடி, மற்றும் ரூ. 999, Mi Protect service ஆகியவை அடங்கும்.


Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 Pro MIUI 10 உடன் Android 9 Pie-ஐ இயக்குகிறது. ஆனால், ஜியோமி விரைவில் MIUI 11-ஐ மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 8GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Redmi Note 8 Pro, 8-megapixel ultra-wide-angle camera, a 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro lens உதவியுடன் f/1.89 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் அடங்கும். ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் f/2.0 lens உடன் 20-megapixel செல்ஃபி கேமரா சென்சாரும் அடங்கும்.

Redmi Note 8 Pro, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.