Redmi Note 8, Redmi Note 8 Pro மற்றும் Redmi 8 போன்கள் இந்தியாவில் திறந்த விற்பனைக்கு வந்துள்ளன. Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro இப்போது Amazon India மற்றும் Mi.com 24x7 வழியாகவும், Redmi 8, Flipkart மற்றும் Mi.com வழியாகவும் கிடைக்கும். மூன்று போன்களுக்கான ஃபிளாஷ் விற்பனை இப்போது முடிந்துவிட்டது. அவை திறந்த விற்பனையில் கிடைக்கும். அதாவது பயனர்கள் ஆன்லைனில் போன்களை வாங்க காத்திருக்க வேண்டியதில்லை.
Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஆகியவை Amazon India மற்றும் Mi.com-ல் திறந்த விற்பனையில் கிடைக்கும் என்று அறிவிக்க ஜியோமி (Xiaomi) ட்விட்டருக்கு (Twitter) அழைத்துச் சென்றது. Redmi 8 போன் Flipkart மற்றும் [Mi.com] (https://store.mi.com/in/buy/product/redmi-8) ஆகியவற்றிலும் இலவசமாக கிடைக்கும். இந்த போன்கள், Mi Home stores உட்பட, சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாகவும் கிடைக்கிறது என்று ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999-யாகவும், அதன் 6GB 128GB மாடலின் விலை ரூ. 12,999-யாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் Moonlight White, Neptune Blue, மற்றும் Space Black வேரியண்டில் வருகிறது. இருப்பினும், ஜியோமி சமீபத்தில் புதிய Cosmic Purple கலர் ஆப்ஷனையும் கொண்டுவந்தது.
இந்தியாவில் Redmi Note 8 Pro-வின் 6GB RAM 64GB வேரியண்ட் ரூ. 14,999-ல் தொடங்குகிறது. அதே சமயம் போனின் 6GB RAM 128GB வேரியண்டும் ரூ. 15,999-க்கு வருகிறது. அதன் top-end 8GB RAM 128GB ஸ்டோரேஜ் பதிப்பு ரூ. 17,999-ஆக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Gamma Green, Halo White மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட Electric Blue கலர் ஆப்ஷனிலும் வருகிறது.
இறுதியாக, இந்தியாவில் Redmi 8-ன் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு ரூ. 7,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 8,999-யாக உள்ளது. இருப்பினும், முதல் ஐந்து மில்லியன் யூனிட்டுகளுக்கு, ஜியோமி 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலை வழங்குகிறது. இதன் அறிமுக விலை ரூ. 7,999 ஆகும். இந்த போன் Emerald Green, Onyx Black, Ruby Red மற்றும் Sapphire Blue வண்ண விருப்பங்களில் வருகிறது.
Amazon மற்றும் Flipkart ஆகிய இரண்டும் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள், no-cost EMI ஆப்ஷன்கள் மற்றும் போன்களில் வங்கி தள்ளுபடிகள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளன.
டூயல்-சிம் (நானோ) Redmi Note 8, MIUI 11 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 aspect ratio மற்றும் 2.5D curved glass protection உடன் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 6GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
Redmi Note 8-ல், 8-megapixel wide-angle shooter, 2-megapixel depth sensor மற்றும் 2-megapixel macro snapper உடன் 48-megapixel முதன்மை சென்சார் ஆகியவற்றை குவாட் ரியர் கேமரா அமைப்பில் கொண்டது. முன்புறத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு, f/2.0 உடன் 13-megapixel கேமரா சென்சார் உள்ளது.
இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இறுதியாக, இந்த போன் 18W fast சார்ஜின் ஆதரவுடன், 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 Pro, MIUI 11 உடன் Android 9 Pie-யால் இயக்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 8GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Redmi Note 8 Pro, 8-megapixel ultra-wide-angle கேமரா, 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro lens உதவியுடன் f/1.89 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் அடங்கும். ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் f/2.0 lens உடன் 20-megapixel செல்ஃபி கேமரா சென்சாரும் அடங்கும்.
Redmi Note 8 Pro, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.
டூயல்-சிம் (நானோ) Redmi 8, MIUI 11 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. Corning Gorilla Glass 5 பாதுகாப்புடன் 6.22-inch HD+ (720x1520 pixels) டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது.
Redmi 8 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் f/1.8 lens உடன் 12-megapixel Sony IMX363 முதன்மை சென்சார் மற்றும் 2-megapixel depth sensor ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.
போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, GPS/ A-GPS, infrared, wireless FM radio, 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். மேலும், போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது. ஜியோமி, Redmi 8-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்