ரெட்மி நோட் 8 தயாரிப்பில் சியோமி நிறுவனம் ஈடுபட்டுள்ளது, மேலும் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமியின் ரெட்மீ தலைவரான லு வெயிபிங்தான், தனது வெய்போ கணக்கில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். M1906GT என்ற மாடல் பெயருடன் இந்த அறியப்படாத ரெட்மி ஸ்மார்ட்போன் ஒரு சான்றிதழ் தளத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன - இது இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் 64 மெகாபிக்சல் ரெட்மி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் அல்லது ஆவலாக எதிர்பார்க்கப்படும் மீடியாடெக்கின் புதிய ஹீலியோ G90T எஸ் ஓ சி ப்ராசஸரால் இயக்கப்படும் கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மீயின் போது மேலாளர் லூ வெய்பிங் வெளியிட்ட இந்த தகவல் ரெட்மீ நோட் 8 ஸ்மார்ட்போனைத்தான் குறிக்கிறது, மேலும் தற்போது போட்டியில் உள்ள ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஐடிஹோம் என்ற சீன வெளியிட்டகம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக, சியோமி நிறுவனம் மீடியாடெக்கின் புதிய ப்ராசஸர் கொண்டு ஒரு கேமிங் ஸ்மார்ட்போனின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரத்தில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தளத்தில், இந்த சியோமியின் 'M1906GT' மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளதாக மைட்ரைவர்ஸ் (MyDrivers) தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் அங்கு இடம்பெறவில்லை. இந்த ரெட்மீ ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனா, நோட் 8 ஸ்மார்ட்போனா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்