உலக சந்தைகளில் 'ரெட்மி நோட் 7 ப்ரோ' வெளியீடப்படாது: சியோமி!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 26 மார்ச் 2019 18:49 IST
ஹைலைட்ஸ்
  • உலக சந்தைகளில் ரெட்மி நோட் 7 ப்ரோ வெளியாகாது என தகவல்!
  • இந்தியா மற்றும் சீனாவில் வெளியான ரெட்மி நோட் 7 ப்ரோ!
  • ரெட்மி நோட் 7 போன் உலகம் முழுவதும் வெளியாகிறது!

சியோமி நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சீனாவில் மட்டுமே வெளியாகும் என்றும் இது ஒரு வகையான 'தயாரிப்பு யுக்தி' என சியோமியின் தென் கிழக்கு ஆசிய இயக்குனரான ஜான் ஷேன் கூறினார். 

இந்த தயாரிப்புடன் வெளியான ரெட்மி நோட் 7 தயாரிப்பு இந்தியா, சீனா மட்டுமின்றி வேறு சில நாடுகளிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. ' ரெட்மி போனை வெளியிட முடியாமல் போனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் ரெட்மி நோட் 7 தயாரிப்புக்கும் ரெட்மி நோட் 7 ப்ரோ தயாரிப்புக்கும் பெரிய வித்தியாசமில்லை. ரெட்மி நோட் 7 தயாரிப்பு 48 மெகா பிக்சல் கேமராவை கொண்டுள்ளது. நாங்கள் மீண்டும் இதுபோன்ற தயாரிப்புகளை கொண்டு வருவோம் என அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்

ரெட்மி நோட் 7 ப்ரோ அறிமுக விலை (இந்தியா): 
சியோமி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ரெட்மி நோட் 7 ப்ரோ, ஸ்மோர்ட் போனுக்கு ஆரம்ப விலையாக ரூ.13,999 நிர்ணயம் செய்துள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த மாடல் போனுக்கு ரூ.13,999 எனில், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் ரூ.16,999 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரெட்மி நோட் 7 ப்ரோ போன்களை வாங்குபவர்களுக்கு 1,120 ஜிபி (4ஜி) டேட்டாவை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலவசமாக இந்த போனுடன் அல்ட்ரா ஸ்லிம் கேஸ் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள்:

ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம்பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி  அமைப்புகளையும் ரெட்மி ஸ்மார்ட்போன் பொற்றுள்ளது.

மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. 

Advertisement

கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13  மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன. 

மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன் 4,000mAh பேட்டரி பவர், கியூவிக் சார்ஜ் சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற பல அப்டேட்களை இந்த போன் பெற்றுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.