Redmi Note 7 ஸ்மார்ட்போன்கள் விரைவில் ஆண்ட்ராய்டு 10 மென்பொருளின் அடிப்படையில் MIUI 11-க்கு புதுப்பிக்கப்படலாம். நினைவு கூற, இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் MIUI 11-க்கு புதுப்பிக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் Android 9 Pie-ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்த நேரத்தில், MIUI மன்றத்தில் ஒரு மதிப்பீட்டாளர், Xiaomi ஏற்கனவே Android 10- அடிப்படையிலான MIUI 11 மென்பொருளில் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். வரவிருக்கும் முக்கிய மென்பொருள் அப்டேட் குறித்து ஜியோமியிடமிருந்து அதிகாரப்பூர்வமாக நாங்கள் இதுவரை கேள்விப்படவில்லை.
Mi Community forum-ல் ஒரு மதிப்பீட்டாளரின் பதிவின் படி, ஜியோமி ஏற்கனவே Redmi Note 7 மற்றும் Redmi Note 7 Pro-வுக்கான ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 11-ல் வேலை செய்யத் தொடங்கியுள்ளது. மேலும் முதல் 2-3 வாரங்களில் முதல் பொது பீட்டாவில் வெளியிடுவதைக் காணலாம். வெளியீடு குறித்து கருத்து தெரிவிக்க நாங்கள் ஜியோமியை அணுகியுள்ளோம், மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம்.
இந்தியாவில் Redmi Note 7-ன் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 11,999-யாக விலையிடப்படுள்ளது. வண்ண விருப்பங்களில் Onyx Black, Ruby Red மற்றும் Sapphire Blue ஆகியவை அடங்கும்.
Redmi Note 7 Pro-வைப் பொறுத்தவரை, 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 13,999-யாக விலையிடப்படுள்ளது. அதன் 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 16,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Neptune Blue, Nebula Red மற்றும் Space Black வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
டூயல்-சிம் (நானோ) Redmi Note 7, 19.5:9 aspect ratio உடன் 6.3-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், Qualcomm Snapdragon 660 SoC உள்ளது. இது Quick Charge 4.0 ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் Android 9 Pie அடிப்படையிலான MIUI 11-ல் இயங்குகிறது. கேமராவைப் பொறுத்தவரை, 2-megapixel secondary depth சென்சாருடன் இணைக்கப்பட்டு, f/2.2 aperture உடன் 12-megapixel முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக முன்புறத்தில், 13-megapixel சென்சார் உள்ளது.
டூயல்-சிம் (நானோ) Redmi Note 7 Pro-வும் 19.5:9 aspect ratio உடன் 6.3-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Qualcomm Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது. இது Qualcomm's Quick Charge 4.0 ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த போன் Android 9 Pie அடிப்படியிலான MIUI 11-ல் இயங்குகிறது. கேமராவைப் பொறுத்தவரை, டூயல் ரியர் கேமரா அமைப்பில், f/1.79 aperture உடன் 48-megapixel முதன்மை கேமரா மற்றும் 5-megapixel secondary depth சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிகளுக்காக முன்பக்கத்தில், 13-megapixel கேமரா சென்சார் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்