Redmi Note 7 Pro, Redmi Note 7 மற்றும் Redmi Note 7S ஆகியவற்றிற்கான MIUI 11-ன் வெளியீட்டை பயனர்கள் புகாரளிக்கத் தொடங்கிய உடனேயே, அதே அப்டேட்டின் ஸ்கிரீன் ஷாட்களையும் தங்கள் சாதனங்களில் வந்து சேரத் தொடங்கின. Redmi Note 7 மற்றும் Redmi Note 7S ஆகியவற்றில் MIUI 11 மென்பொருள் அப்டேட் பதிப்பு எண் MIUI 11.05.0.PFGINXM உடன் வருகிறது. இந்தியாவில், பயனர்கள் பதிவிட்ட ஸ்கிரீன் ஸ்டார்டில், அப்டேட்டின் அளவு 712MB இருப்பதாகக் கூறுகின்றன. மேலும், இது அக்டோபர் 2019 பாதுகாப்பு இணைப்பையும் (security patch) கொண்டு வருகிறது.
இந்தியாவில் Redmi Note 7 மற்றும் Redmi Note 7S பயனர்கள் மன்றங்களில் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டுள்ளனர். மேலும், அவர்கள் MIUI 11 அப்டேட்டையும் பெறத் தொடங்கியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. Redmi Note 7 மற்றும் Redmi Note 7S ஆகியவை அக்டோபர் 22 மற்றும் அக்டோபர் 31-க்கு இடையில் அப்டேட் பெறும் என்று ஜியோமி முன்பே அறிவித்திருந்தது. நிறுவனம் தனது வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது. ஆனால், அனைத்து பயனர்களும் இதுவரை புதுப்பிப்பைக் காணவில்லை என்பதால், இது ஒரு அரங்கமாகத் தெரிகிறது.
உங்கள் Redmi Note 7 அல்லது Redmi Note 7S அப்டேட்டை பெற்றுள்ளதா இல்லையா என்பதை About Phone > System Update பிரிவில் சரிபார்க்க பரிந்துரைக்கிறோம். உங்களிடம் இருந்தால், வலுவான Wi-Fi இணைப்பு மற்றும் போன் சார்ஜில் இருக்கும் போது அப்டேட்டை பதிவிறக்கவும்.
ஜியோமி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை அல்லது பதிவிறக்க இணைப்புகளை வழங்கவில்லை. MIUI 11 உடன் வரும் புதிய அம்சங்களில் Dynamic Clock, Kaleidoscope effects மற்றும் custom codes ஆகியவை always-on lock screen-ல் வைக்கப்படலாம். இது ஒரு புதிய minimalistic வடிவமைப்பு, புதிய dynamic sound effects, புதிய Mi File Manager app, Steps Tracker, Wallpaper Carousel மற்றும் Floating Calculator ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்