ரெட்மி K20 ப்ரோ மொபைல் போனை சியோமி நிறுவனம் சீக்கிரமே இந்தியாவில் வெளியிட உள்ளது. இது குறித்து சியோமி, தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு டீசர் வெளியிட்டுள்ளது. அந்த டீசரில் ‘உலகின் அதிவேக போன்' என்று K20 ப்ரோ-வைக் கூறியுள்ளது. இந்த புதிய K20 ப்ரோ, சென்ற மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. ஆக்டா-கோர் ஸ்நாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி மற்றும் 8 ஜிபி ரேம் மூலம் அந்த போன் பவரூட்டப்பட்டிருந்தது. இது, ஒன்பிளஸ் 7 ப்ரோ-வுடன் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 7 ப்ரோ-வைப் போலவே, ரெட்மி K20 ப்ரோவிலும் ‘பாப்-அப்' செல்ஃபி கேமரா இருப்பது குறிப்பிடத்தக்கது.
K20 ப்ரோ குறித்த அப்டேட்டை ரெட்மி இந்தியாவின் ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது. அந்த ட்வீட்டில், “சில கொண்டாட்டங்கள் குறைந்து காலத்துக்கு மட்டுமே நீடித்திருக்கும்” என்று ஒன்பிளஸ் நிறுவனத்தை மறைமுகமாக கேலி செய்துள்ளது. இந்த ட்வீட்டுடன்தான் ‘ரெட்மி K20 ப்ரோ'-வை, உலகின் அதிவேக போன் என்று கூறியுள்ளது சியோமி.
அதே நேரத்தில், இந்தியாவில் K20 ப்ரோ எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து எந்தவித தகவலையும் சியோமி நிறுவனம் கூறவில்லை. ஆனால், அடுத்த 6 வாரங்களில் K20 மற்றும் K20 ப்ரோ போன்கள் இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படும் என்று இந்தியாவின் சியோமி நிறுவன, எம்.டி மனுகுமார் ஜெயின் கூறியுள்ளார். எனவே, அடுத்த மாத முடிவிற்குள் இந்திய சந்தையில் K20 ப்ரோ வெளியாகும் என்று நம்பலாம்.
Some celebrations are short-lived. Stay tuned. pic.twitter.com/NitBxGxOVA
— Redmi India (@RedmiIndia) June 14, 2019
இந்தியாவில் K20 ப்ரோ-வின் உத்தேச விலை:
K20 ப்ரோவின் விலை குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் சொல்லப்படவில்லை என்றாலும், சீனாவில் இருக்கும் விலையை அது ஒத்திருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. அதை வைத்துப் பார்த்தால் இந்தியாவில் K20 ப்ரோ, சுமார் 25,200 ரூபாய்க்கு விற்கப்படலாம். 6ஜிபி + 64ஜிபி வகைக்கு இந்த விலை இருக்கலாம். அதே நேரத்தில் 6ஜிபி + 128ஜிபி வகை, 26,200 ரூபாய்க்கு விற்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் K20 ப்ரோவின் உச்சபட்ச வகையான 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் இருக்கிறது. இது 30,200 ரூபாய்க்கு விற்கப்படலாம்.
ரெட்மி K20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
நானோ டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள், 6,39 இன்ச் ஆமோலெட் முழு எச்.டி+ டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட், ஸ்நாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 8ஜிபி ரேம் வசதிகளை இந்த போன் கொண்டிருக்கிறது.
கேமராவைப் பொறுத்தவரை பின்புறம் 3 சென்சார்கள் உள்ளன. அதில் 48 மெகா பிக்சல் கொண்ட முதன்மை சென்சார், 13 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 8 மெகா பிக்சல் கொசண மூன்றாம் நிலை சென்சார் உள்ளன. செல்ஃபிகளுக்காக 20 மெகா பிக்சல் திறன் கொண்ட பாப்-அப் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர 4ஜி எல்.டீ.ஈ, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் v5.0, GPS/ A-GPS, NFC, யு.எஸ்.பி Type-C போர்ட், மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக், 4000 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் 27w திறன் கொண்ட அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை K20 ப்ரோ கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்