இரண்டாவது சேலுக்கு தயாராகும் சியோமியின் 'ரெட்மி கோ'!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 22 மார்ச் 2019 19:44 IST
ஹைலைட்ஸ்
  • மார்ச் 25 ஆம் தேதி இரண்டாவது சேலை தொடங்கும் 'ரெட்மி கோ'
  • எம்ஐ மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் மதியம் 2 மணி முதல் விற்பனை!
  • 3,000mAh பேட்டரி பவருடன் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.

இந்தியாவில் ரூ.4,999க்கு வெளியான ரெட்மி கோ!

சியோமி நிறுவனத்தின் சார்பில் 'ரெட்மி கோ' ஸ்மார்ட்போன் இன்று முதல்முறையாக ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் வெளியானது. இன்று மதியம் 12 மணிக்கு துவங்கிய இந்த சேல் வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து சியோமி நிறுவனம் சார்பில் இரண்டாவது சேலின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் இரண்டாவது சேல் வரும் மார்ச் 25 ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. மதியம் 2 மணி அளவில் துவங்கவுள்ள அந்த சேல் போன் ஸ்டாக்கில் இருக்கும் வரை தொடரும்.

3,000mAh பேட்டரி, ஹெச்டி திரை மற்றும் 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி போன்ற பல சிறப்பு அம்சங்களை இந்த ரெட்மி கோ போன் பெற்றுள்ளது.

இந்த போனின் சேல் துவங்கும் போது நினைவுடல் ஏற்படுத்தும் 'நோட்டி ஃபை மீ' வசதியை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அமைத்துள்ளது. மேலும் அறிமுக சலுகைகளாக ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.2,200 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 100ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி வட்டியில்லா தவணைத்திட்ட வசதி மற்றும் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு பயனாளிகளுக்கு 5% தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது.

ரெட்மி கோ இந்திய விலை மற்றும் அறிமுக சலுகைகள்:

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட மாடல் இந்தியாவில் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் நீல நிறங்களில் விற்பனைக்கு வெளியாகிறது.

அறிமுக விற்பனையைத் தொடர்ந்து ரூ.2,200 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 100ஜிபி இலவச டேட்டாவை ஜியோ நிறுவனம் இந்த போனுக்குத் தருகிறது. மேலும் ஃபிளிப்கார்ட் சார்பில் இந்த போனுக்கு கட்டணமில்லா தவணைத் திட்ட வசதி, ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர்க்கு கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி போன்ற வசதிகள் கிடைக்கின்றன.

Advertisement

ரெட்மி கோ அமைப்புகள்:

இரண்டு சிம்-கார்டு வசதிகள் கொண்டுள்ள இந்த ரெட்மி கோ ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்டு இயங்குகிறது. மேலும் 5 இஞ்ச் ஹெச்டி திரை, குவாட்-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 425 SoC மற்றும் 1ஜிபி ரேமை இந்த போன் கொண்டுள்ளது.

பின்புறத்தில் 8 மெகா பிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் மாட்யூலை கொண்டுள்ளது. ஹெடிஆர் அமைப்புகள், ஹெச்டி வீடியோ ரெக்கார்டிங் போன்ற பல ஸ்மார்ட் அமைப்புகளை இந்த போன் கொண்டுள்ளது.

Advertisement

இந்த போனில் 8ஜிபி சேமிப்பு வசதி மட்டுமே உள்ள நிலையில் சியோமி நிறுவனம் சார்பில் 128 ஜிபி வரையுள்ள எஸ்டி கார்டு பொருத்தும் வசதி இடம் பெற்றுள்ளது. 137 கிராம் மற்றும் 3,000mAh பேட்டரி வசதியை இந்த போன் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மைக்ரோபோன்கள் போனில் இருக்கும் வீண் சத்தங்களை குறைக்கும் என சியோமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Well built and good-looking
  • Good battery life
  • Bad
  • Sub-par cameras
  • Limited RAM and storage
 
KEY SPECS
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Go, Redmi Go Price In India, Redmi Go Specifications, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.