Flipkart, Mi.com வழியாக அதிரடி சலுகைகளுடன் விற்பனைக்கு வருகிறது Redmi 8!

Flipkart, Mi.com வழியாக அதிரடி சலுகைகளுடன் விற்பனைக்கு வருகிறது Redmi 8!

புதிய Redmi 8 விற்பனை சுற்று Flipkart, Mi.com மற்றும் Mi Home stores வழியாக நடைபெறும்

ஹைலைட்ஸ்
  • Redmi 8, 4 வண்ண விருப்பங்களில் வாங்குவதற்கு கிடைக்கும்
  • ஜியோமி கடந்த மாதப் தொடக்கத்தில் Redmi 8-ஐ அறிமுகப்படுத்தியது
  • Redmi 8, Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது
விளம்பரம்

Redmi 8 இன்று இந்தியாவில் வாங்குவதற்கு தயாராக உள்ளது. ரெட்மி போனின் புதிய விற்பனை சுற்று Flipkart, Mi.com மற்றும் Mi Home stores வழியாக நடைபெறும்.


இந்தியாவில் Redmi 8-ன் விலை, விற்பனை சலுகைகள்:

Redmi 8-ன் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு ரூ. 7,999-யாக நிர்ணயித்துள்ளது. அதே சமயம் அதன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 8,999-யாக உள்ளது. இருப்பினும், முதல் ஐந்து மில்லியன் யூனிட்டுகளுக்கு, ஜியோமி 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலை மட்டுமே வழங்குகிறது. இதன் அறிமுக விலை ரூ. 7,999-க்கு கிடைக்கும். Redmi 8-க்கான சமீபத்திய விற்பனை சுற்று Flipkart, Mi.com மற்றும் Mi Home stores வழியாக மதியம் 12 மணிக்கு தொடங்கும். இந்த போன் Emerald Green, Onyx Black, Ruby Red மற்றும் Sapphire Blue வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

Redmi 8 Review

Redmi 8-ன் விற்பனை சலுகைகளில் HDFC வங்கி டெபிட் கார்டுகளில் 10 சதவிகித கேஷ்பேக் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது EMI பரிவர்த்தனைகளில் ஐந்து சதவிகித கேஷ்பேக் ஆகியவை அடங்கும். இரண்டு கேஷ்பேக் சலுகைகளும் பிளிப்கார்ட் மூலம் கிடைக்கின்றன. மேலும், no-cost EMI ஆப்ஷன்ஸ் ஒரு மாதத்திற்கு ரூ. 667-ல் இருந்து தொடங்குகிறது

நினைவுகூர, Redmi 8 கடந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Redmi 7-ன் தொடராக இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Redmi 8-ன் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Redmi 8, Android 9 Pie உடன் MIUI 10 இயங்குகிறது. Corning Gorilla Glass 5 பாதுகாப்புடன் 6.22-inch HD+ Dot Notch display அம்சத்தைக் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது.

Redmi 8 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில்  f/1.8 lens உடன் 12-megapixel Sony IMX363 முதன்மை சென்சார் மற்றும் 2-megapixel depth sensor ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. Face Unlock உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் அம்சங்களும் உள்ளன.

ஜியோமி, Redmi 8-ல் 64 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்கியுள்ளது. இது microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கக்கூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, GPS/ A-GPS, infrared, wireless FM radio, 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். மேலும், போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது. ஜியோமி, Redmi 8-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது. 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • USB Type-C port, wireless FM radio
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Poor camera quality in low light
  • Bloatware and spammy notifications in MIUI
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi 8 price in India, Redmi 8 specifications, Redmi 8, Redmi, Xiaomi
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »