Redmi 8 அதன் வாராந்திர ஃபிளாஷ் விற்பனையில் Flipkart மற்றும் Mi.com வழியாக இன்று வாங்குவதற்கு கிடைக்கும். பட்ஜெட் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 5,000mAh பேட்டரி மிகப்பெரிய சிறப்பம்சமாக கொண்டுள்ளது. Redmi 8 இரட்டை பின்புற கேமரா அமைப்பையும், நிறுவனத்தின் 'Aura Mirror' வடிவமைப்பையும் கொண்டுள்ளது. Redmi 8 இன்றைய விற்பனை, இந்தியாவில் அதன் விலை, விவரக்குறிப்புகள் உட்பட கூடுதல் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.
இந்தியாவில் Redmi 8-ன் விலை மற்றும் விற்பனை நேரம்:
Redmi 8-ன் 3GB + 32GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 7,999 முதல் ஆரம்பமாகிறது. 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 8,999-யாக உள்ளது. இருப்பினும், முதல் 5 மில்லியன் யூனிட்டுகளுக்கு, 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மட்டுமே அறிமுக விலையான ரூ. 7,999-க்கு கிடைக்கிறது.
Flipkart, Mi.com மற்றும் Mi Home stores வழியாக மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். Redmi 8, Emeral Green, Onyx Black, Ruby Red மற்றும் Sapphire Blue ஆகிய நிறங்களில் இருக்கும். நினைவுகூற, Redmi 8 இந்தியாவில் கடந்த மாதத் தொடக்கத்தில் Xiaomi-யால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Redmi 8-ன் விவரக்குறிப்புகள்:
Redmi 8, Corning Gorilla Glass 5-யுடன் 6.22-inch HD+ (720x1520 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது. இரட்டை பின்புற கேமரா அமைப்பில் (12-megapixel + 2-megapixel), 8-megapixel முன் கேமரா ஆகியவை உள்ளது. microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கக்கூடிய 64 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் USB Type-C port, rear fingerprint சென்சார் மற்றும் 18W fast சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்