ரெட்மீயின் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 28 ஜூன் 2019 14:18 IST
ஹைலைட்ஸ்
  • 5.45-இன்ச் HD+ திரைய கொண்டுள்ளது ரெட்மீ 7A
  • ஸ்னேப்ட்ராகன் 439 ப்ராசஸரை கொடுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
  • இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவு 4000mAh

சீனாவில் இந்த ரெட்மீ 7A ஸ்மார்ட்போனின் விலை 549 யுவான்கள் (5,500 ரூபாய்) என்ற அளவிலிருந்து துவங்குகிறது

ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக, சியோமி இந்தியாவில் தலைமை நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன் அறிவித்துள்ளார். இந்த தகவலை வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டிருந்தார். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகிறது, எந்த விலையில் விற்பனையாகப்போகிறது என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. அவர் மேலும் கூறுகையில் ரெட்மீ 4A, ரெட்மீ 5A மற்றும் ரெட்மீ 6A ஸ்மார்ட்போன்கள், கடந்த ஏப்ரல் மாதம் வரை 23.6 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். முன்னதாக இந்த ரெட்மீ 7A சீனாவில் மே மாதம் அறிமுகமாகி, இந்த மாதத்தின் துவக்கத்தில் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சீனாவில் வெளியான இந்த ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் அறிமுகமாகியிருந்தது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு, 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 549 யுவான்கள் (5,500 ரூபாய்), 599 யுவான்கள் (6,000 ரூபாய்) என்ற விலையில் சீனாவில் விற்பனையானது. 

ரெட்மீ 7A: சிறப்பம்சங்கள்!

இரண்டு சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 5.45-இன்ச் HD திரை (720x1440  பிக்சல்கள்), 18:9 திரை விகிதத்தை கொண்டுள்ளது அந்த ஸ்மார்ட்போன். ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் அலவிலான கேமராவை கொண்டுள்ளது. மேலும், 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 256GB வரையில் சேமிப்பை கூட்ட microSD கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Excellent battery life
  • Two-year warranty
  • Bad
  • Sub-par camera performance
  • Bloatware and ads in MIUI
 
KEY SPECS
Display 5.45-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi 7A, Redmi 7A specifications, Redmi 7A price, Xiaomi

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. உங்க ஐபோன் ஸ்லோவா இருக்கா? இதோ வந்துருச்சு iOS 26.3! புது அம்சங்கள் முதல் பேட்டரி தீர்வு வரை.. முழு விவரம் உள்ளே
  2. சாம்சங் வெறியர்களே ரெடியா? S26 Ultra-வோட 360 டிகிரி லுக் வெளியாகிடுச்சு! அந்த கேமரா ஐலேண்ட் வேற லெவல்.. முழு விவரம் உள்ளே
  3. Pixel 9a விலையில 11,000 ரூபாய் அதிரடி குறைப்பு! கூகுள் கேமரா வேணுமா? அப்போ உடனே இதை பாருங்க
  4. வெயிட்டிங் லிஸ்ட் ஓபன்! Samsung Galaxy S26 சீரிஸ் இப்போவே ப்ரீ-ரிசர்வ் பண்ணலாம்! அமேசான், பிளிப்கார்ட்ல அதிரடி விற்பனை
  5. பட்ஜெட் பத்தி கவலையே இல்ல! Samsung Galaxy S24 Ultra விலையில ₹25,000 தள்ளுபடி! அமேசான்ல ஆஃபர் மழை.. சீக்கிரம் பாருங்க
  6. சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்ல! Oppo K14x 5G-ல அசுரத்தனமான 6500mAh பேட்டரி! விலை என்ன தெரியுமா?
  7. ஒன்பிளஸ் வெறியர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 13 விலையில 12,000 ரூபாய் அதிரடி குறைப்பு! இந்த சான்ஸ விட்றாதீங்க மக்களே
  8. iPhone-க்கு டஃப் கொடுக்க Samsung S26 ரெடி! எப்போ லான்ச்? என்னென்ன ஸ்பெஷல்? முழு விவரம் உள்ளே
  9. OnePlus-ல இவ்வளவு கம்மி விலையா? Pad 3 முதல் Buds Pro 3 வரை வாரி வழங்கும் சலுகைகள்
  10. பட்ஜெட் விலையில ஒரு தரமான 5G போன்! Lava Bold N2 இந்தியாவிற்கு வராரு.. மத்த பிராண்ட்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.