Photo Credit: JD.com
ரெட்மி 10 எக்ஸ் மே 26 அன்று அறிமுகமாகும். இந்த போனின் முன்பதிவு ஏற்கனவே சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த போன் 4 ஜி மற்றும் 5 ஜி வகைகளில் அறிமுகப்படுத்தப்படலாம். சமீபத்தில், ரெட்மி 10 எக்ஸ் மீடியா டெக் டைமன்சிட்டி 820 சிப்செட்டுடன் சந்தைக்கு வருவதாக ரெட்மி தலைவர் லு வெய்பிங் அறிவித்தார்.
இந்த போன் படத்தில் நான்கு வண்ணங்களில் காணப்படுகிறது. இந்த போனில் 48 மெகாபிக்சல் கேமரா இருக்கும். Redmi Note 9-ல் ஷாவ்மி அதே கேமராவைப் பயன்படுத்தியது. போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் இருக்கும்.
Redmi 10X 6.53 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போனில் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே இருக்கலாம். போனின் உள்ளே மீடியா டெக் டைமன்சிட்டி 820 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். புதிய போன் நிறுவனத்தின் MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும்.
ரெட்மி 10 எக்ஸ் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் இருக்கும். அதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா ஆகியவை உள்ளது. செல்பி எடுக்க 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இந்த போனில் 5,020 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ரெட்மி 10 எக்ஸ் 162.38 x 77.2 x 8.95 மிமீ மற்றும் 205 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இணைப்பிற்கு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது.
Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்