Realme XT ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது, இந்த ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்வு இன்று மதியம் 12:30 மணிக்கு துவங்கவுள்ளது. முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை சீனாவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ரியல்மி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்தியாவிலும், அதிகாரப்பூர்வமான அறிமுகத்திற்கு முன்னதாக, ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்களை டீசர் மூலமாக வெளியிட்டிருந்தது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், விலை, எப்போது விற்பனை போன்ற தகவல்கள் மர்மமாகவே உள்ளது. இன்றைய அறிமுக நிகழ்வில், ரியல்மி நிறுவனம் இந்த தகவலை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு குறிப்பிட்டதுபோல, Realme XT ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக நிகழ்வு இன்று மதியம் 12:30 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த Realme XT ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை அறியப்படாத நிலையில், இன்றைய நிகழ்வில் ரியல்மி நிறுவனம் அந்த தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Pearl Blue) மற்றும் வெள்ளை (Pearl White) என்ற இரு வண்ணங்களில் அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் பல வகையான RAM + சேமிப்பு அளவுகளில் அறிமுகமாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலையை பொருத்தவரை, சமீபத்தில் அறிமுகமான Realme 5 Pro மற்றும் Realme X ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு இடைப்பட்ட விலையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme XT ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து காணுங்கள்...
Realme XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் AMOLED திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை (Android 9 Pie) மையப்படுத்தி ColorOS 6 அமைப்பை கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொருத்தவரை இந்த Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கூடவே, 4,000mAh பேட்டரி, 20W VOOC 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்