Realme, எக்ஸ் 50 சீரிஸின் மூன்றாவது ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. - Realme X50m 5G. இந்த போன் டூயக் ஹோல்-பஞ்ச் செல்பி கேமரா மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனின் மற்ற சிறப்பம்சங்களில் 120Hz டிஸ்ப்ளே, 30 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8 ஜிபி ரேம் ஆகியவை அடங்கும்.
போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் சீனாவில் சிஎன்ஒய் 1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,500)-யாகவும்,
அதன் 8 ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,000)-யாகவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி வைட் மற்றும் ஸ்டாரி ப்ளூ கலர் ஆப்ஷன்களில் ஏப்ரல் 29 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.
இந்த போன் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது Realme UI உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.57 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் 8 ஜிபி வரை இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் Qualcomm Snapdragon 765G SoC-யால் இயக்கப்படுகிறது.
போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. இதில் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ் ஆகியவை அடங்கும்.
செல்பிகளுக்காக, முன்புறத்தில் 16 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகிய டூயல் செல்ஃபி கேமரா அமைப்பு உள்ளது.
இந்த போன் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது தவிர, போனில் ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு மற்றும் டால்பி ஆடியோ ஒருங்கிணைப்பு உள்ளது. மேலும், இது 30W டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,200 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 163.8x75.8x8.9 மிமீ அளவு மற்றும் 194 கிராம் எடையைக் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்