ரியல்மீ நிறுவனம் முன்னதாக சீனாவில் அறிமுகமான 'ரியல்மீ X' ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 15 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்பி கேமரா, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 6.53-இன்ச் FHD+ திரை, 3,765mAh பேட்டரி என அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது. அந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தன்றே, ஜூலை 24 அன்று இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ தளங்களில் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனிற்கு பிரத்யேகமாக 'ஹேட்-டூ-வெய்ட்' சேல் ஒன்றை ஜூலை 18 அன்று நடத்தவுள்ளதாக கூறியிருந்தது. அதன்படி இந்த விற்பனை இன்று காலை 8 மணிக்கு துவங்கியுள்ளது.
ரியல்மீ X ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 4GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 16,999 ரூபாய், 19,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெள்ளை (Polar White) மற்றும் நீலம் (Space Blue) என்ற இரு வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது.
இந்தியாவில், இந்த ஸ்மார்ட்போன்களின் முதல் விற்பனை ஜூலை 24, மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.
சென்ற மாதம், 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரியல்மீ X ஸ்மார்ட்போன் ஸ்பைடர்-மேன் வெர்சன் சீனாவில் அறிமுகமானது. அந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 20,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாவோடோ புகாசாவாவின் கார்லிக் மற்றும் ஆனியன் ரியல்மீ X எடிசனும் 19,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது. இந்த இரண்டு வெர்ஷனும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த 'ஹேட்-டூ-வெய்ட்' சேல் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ தளங்களில் நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு துவங்கிய இந்த விற்பனையில், குறைந்த அளவிலான ஸ்மார்ட்போன்களையே ரியல்மீ நிறுவனம் விற்பனைக்கு வைத்துள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ள இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனின் திரை 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை அளவு, 19.5:9 திரை விகிதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இதன் பின்புறத்தில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்