ரியல்மி தரப்பில் ரியல்மி V3 என்ற குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் ரியல்மி X7 சீரிஸ் மற்றும் ரியல்மி V3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ரியல்மி v3 என்பது ரியல்மி ஸ்மார்ட்போன்களிலேயே மிகக்குறைந்த விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இது மூன்று விதமான ரேம், இரண்டு விதமான கலர் வேரியன்டுகளில் வருகின்றன. பின்பக்கத்ில் மூன்று இமேஜ் சென்சார் கொண்ட கேமரா அமைப்பும், முன்பக்கத்தில் நாட்ச் செல்ஃபி கேமராவும் உள்ளது.
ரியல்மி V3 விலை:
6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி V3 ஸ்மார்ட்போனின் விலை CNY 999 (இந்திய மதிப்பில் சுமார் 10,700 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் 6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியன்ட் CNY 1,399 (இந்திய மதிப்பில் 15,000 ரூபாய்) என்றும், 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியன்ட் CNY 1,599 (இந்திய மதிப்பில் 17,100 ரூபாய்) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது மற்ற நாடுகளில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.5 இன்ச்
பிராசசர்: மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC
கேமரா:
பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. 13MP, 2 MP, 2 MP.
முன்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி சக்தி: 5,000 mAh
சார்ஜிங்: 18W
பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார்
எடை: 189.5 கிராம்
Which are the best truly wireless earphones under Rs. 10,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்