ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் ஓப்பன் சேலில் வெளிவருகிறது என கடந்த வாரம் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. கடந்த மாதம் அறிமுகமான ரியல்மி யு1 பிரத்தியோகமாக அமேசான்.இன்–ல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகம், மீடியாடெக் ஹீலியோ பி70 SoC பிராஸசர் மற்றும் நாட்ச் டிஸ்பிளே, டூயல் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ள இந்த போன் இன்று முதல் ஓப்பன் சேலில் விற்பனைக்கு வருகிறது.
அதாவது, இனி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து பிளாஷ் சேலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும், அமேசான் மற்றும் ரியல்மி வலைதளங்களில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளாலாம்.
ரியல்மி யு1-ன் விலை
இந்தியாவில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகம் கொண்ட ரியல்மி யு1ன் விலையானது, ரூ.11.999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகம் கொண்ட மாடலின் விலை ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதில் 3 ஜிபி வேரியண்ட் மாடல் விரைவில் ஓப்பன் சேலுக்கு வருகிறது. இதில் ரியல்மி நிறுவனம் சில ஆஃபர்களையும் அறிவித்துள்ளது. ரூ.5750 ஜியோ பலன்களையும் பெறலாம் என அறிவித்துள்ளது.
ரியல்மி 1-ன் சிறப்பம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஹீலியோ பி70 அக்டோ கோர் SoCயினை அடிப்படையாகக் கொண்ட போன் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் ப்ராஸ்சர் ARM மாலி ஜி72 MP3 ஜிபியுவினைக் கொண்டுள்ளது. டூயல் கேமரா செட்டப் உள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. ஸ்போர்டஸ் டிஸ்பிளே கொண்ட 6.3 இன்ச் திரை கொண்டுள்ளது. இதன் நினைவகத்தை மைக்ரோ sd கார்டு கொண்டு 256 ஜிபி வரை விரிவபடுத்திக்கொள்ளலாம்.
கேமராவை பொறுத்தவரையில், பின்பக்கம் டூயல் கேமரா கொண்டுள்ளது 13 மெகா பிக்செல்ஸ் பிரைமரி சென்சார் f/2.2 அப்பர்ச்சர் எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது. முன்பக்கம் 25 மெகா பிக்செல்ஸ் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்