Realme Narzo 10 மற்றும் Realme Narzo 10A போன்கள் ஏப்ரல் 21-ஆம் தேதி ரியல்மி வெளியிடுகிறது. மார்ச் மாதம் அறிமுகமாக இருந்த இந்த போன்கள், கொரோனா வைரஸ் ஊரடங்கால், ரியல்மியின் அனைத்து வெளியீடும் நிறுத்தப்பட்டன. மேலும், ஏப்ரல் 20 முதல் மொபைல் போன் மற்றும் மின்னணு சாதனங்களை விற்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, ரியல்மி இந்த புதிய தேதியை அறிவித்ததுள்ளது. Realme நர்சோ சீரிஸ் வெளியீட்டு நிகழ்வு மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. இது யூடியூபில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
ரியல்மி நர்சோ 10-ன் விலை ரூ.15,000-க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன், Realme 6i-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6.5 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்பிளே இருக்கக்க்கூடும். இது MediaTek Helio G80 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன், பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர் மற்றும் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் ஷூட்டருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5,000 எம்ஏஎச் பேட்டரி இருப்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ரியல்மி நர்சோ 10 ஏ, யல்மி சி3-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன், MediaTek Helio G70 SoC, 6.5 இன்ச் எச்டி + திரை மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த போன், மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்