ரியல்மி நர்சோ 10 மற்றும் ரியல்மி நர்சோ 10 ஏ போன்கள் இந்தியாவில் மார்ச் 26 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், சமீபத்தில் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, இந்த வெளியீடு இப்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரியல்மி இந்தியா தலைவர் மாதவ் ஷெத், நிறுவனம் வரவிருக்கும் அனைத்து வெளியீடுகளையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். பெரிதும் கிண்டல் செய்யப்பட்ட ரியல்மி நர்சோ போன்களும் இதில் அடங்கும். நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு, அனைத்து குடிமக்களும் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஷெத் கேட்டுக்கொண்டார்.
Realme Narzo 10 மற்றும் Realme Narzo 10A போன்களின் வெளியீடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்க ஷெத் Twitter-க்கு அழைத்துச் சென்றார். நிறுவனம் கேஜெட்ஸ் 360-க்கும் இதை உறுதிப்படுத்தியது மற்றும் வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஷெத் தனது ட்வீட்டில், “நேற்று எங்கள் மாண்புமிகு பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக, #realmeNarzo சீரிஸ் உட்பட வரவிருக்கும் அனைத்து வெளியீடுகலையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். நம் குடும்பத்திலும் நம் மீதும் கவனம் செலுத்த வேண்டிய நேரம். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும்” என்று எழுதினார்.
இரண்டு போன்களின் விற்பனை ஒத்திவைக்கப்படும் என்று ஷெத் கூறிய உடனேயே இது வருகிறது. அந்த நேரத்தில், வெளியீடு ரத்து செய்யப்படுமா இல்லையா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், அந்த குழப்பம் இப்போது நீக்கப்பட்டுள்ளது.
அனைத்து Realme ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் ‘மேக் இன் இந்தியா' உற்பத்தி ஆலையையும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நிர்வாகி உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்தார். மேலும், அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை நிறுத்திவிட்டார். ரியல்மி நர்சோ 10 மற்றும் ரியல்மி நர்சோ 10 ஏ ஆகியவற்றின் வெளியீட்டை ரத்து செய்வதன் மூலம் அரசின் உத்தரவுக்கு நிறுவனம் இணங்குகிறது. புதிய சீரிஸ் ‘ஜெனரேஷன் இசட்'-ஐ இலக்காகக் கொண்டுள்ளது. மேலும், இது முறையே Realme 6i மற்றும் Realme C3-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்புகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்