சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் Realme C-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இந்தியாவில் Realme C3 சேர உள்ளது. இந்த வரிசை நுழைவு நிலை நுகர்வோருக்கு உதவுகிறது மற்றும் நல்ல அனுபவத்தை அளிப்பதாகக் கூறப்படும் சிறந்த விவரக்குறிப்புகளைக் கொண்டுவருகிறது. தற்போதுள்ள இரண்டு Realme C-சீரிஸ் போன்களும், கடந்த ஆண்டு எங்கள் சிறந்த போன் பட்டியல்களில் ஒன்று அல்லது மற்றொன்றில் ஒரு இடத்தைக் கண்டறிந்துள்ளன. இப்போதும்கூட, Realme C2 சிறந்த ஆப்ஷன்களில் ஒன்றாகும். இதை ரூ. 7,000-க்கு வாங்கலாம்.
Realme C3-ஐ பிப்ரவரி 6-ஆம் தேதி நாட்டில் அறிமுகம் செய்யப்போவதாக ரியல்மி அறிவித்துள்ளது. நிறுவனம் புதுதில்லியில் ஒரு பத்திரிகையாளர் நிகழ்வை நடத்துகிறது, அது பகல் மதியம் 12:30 மணிக்கு நடைபெறும். நிறுவனம் அதை சமூக ஊடக சேனல்கள் மற்றும் யூடியூப்பில் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யும். எப்போதும் போல, அனைத்து தகவல்களையும் உங்களுக்குக் கொண்டுவருவதற்காக வெளியீட்டு நிகழ்வில் நாங்கள் கலந்துகொள்வோம்.
Realme C3 அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நிறுவனம் விலை நிர்ணயம் குறித்து ஒரு குறிப்பையும் கொடுக்கவில்லை. அதன் முன்னோடிகளைப் போல நுழைவு நிலை ஸ்மார்ட்போன் என்பது உறுதி என்றாலும். நினைவுகூர, Realme C1-ன் விலை ரூ. 6999-யாக விலையிடப்படுள்ளது. அதே சமயம் Realme C2-வின் 2GB RAM வேரியண்டின் விலை ரூ. 5,999 மற்றும் 3GB RAM வேரியண்டிற்கு ரூ. 7,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Realme C3-யின் விலையும் இந்த வரம்பில் இருக்க வேண்டும்.
விற்பனை சேனல்களைப் பொறுத்தவரை, பிளிப்கார்ட் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனை கிண்டல் செய்து வருகிறது. எனவே, போனை எடுத்துச் செல்லும் இ-சில்லறை விற்பனையாளர்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். மேலும், ரியல்மி தனது எல்லா போன்கலையும் அதன் சொந்த வலைத்தளத்தின் மூலம் விற்பனை செய்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எனவே Realme C3-ஐயும் அங்கே காணலாம் என்று எதிர்பார்க்கலாம். கடைசியாக, ரியல்மி தனது ஐந்து போன்களை, இந்தியாவில் அமேசான் வழியாக வழங்கத் தொடங்கியுள்ளதால், இ-சில்லறை நிறுவனம் Realme C3-ஐயும் வழங்க முடியும். ஆனால், அது குறித்து எந்த உறுதிப்பாடும் இல்லை. கூடுதலாக, ரியல்மி அதன் ஆஃப்லைன் கூட்டாளர்கள் வழியாக வரவிருக்கும் போனை சில்லறை விற்பனை செய்யும்.
ரியல்மி, ஏற்கனவே பல Realme C3-யின் விவரக்குறிப்புகளை அறிவித்துள்ளது. எனவே, ஸ்மார்ட்போனிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்ற யோசனையைப் பெற பிப்ரவரி 6 வரை காத்திருக்க வேண்டியதில்லை. பிளிப்கார்ட்டின் டீஸர் பக்கத்தின்படி, போனில் 6.5-இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த போனில், 89.8 percent screen-to-body ratio இருக்கும்.
மற்ற விவரக்குறிப்புகளில், Realme C3, 3GB மற்றும் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio G70 SoC-ஐ பேக் செய்கிறது. இந்த போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 64 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த போனின் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் பிரதான ஷூட்டர் மற்றும் எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு இருக்கும். முன் கேமரா விவரங்கள் தற்போது தெளிவாக இல்லை. ஆண்ட்ராய்டு பதிப்பையும், நிறுவனத்தின் Realme UI-யை போன் கொண்டு செல்லுமா என்பதும் எங்களுக்குத் தெரியாது.
மேலும், விவரங்கள் வெளிவருவதால் இந்தப் பக்கத்தைப் புதுபித்துக்கொண்டே இருப்போம். எனவே, நீங்கள் போனில் ஆர்வமாக இருந்தால், விரைவான அணுகலுக்காக அதை புக்மார்க் செய்யுங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்