இந்தியாவில் மீண்டும் விற்பனையாகவுள்ளது, ரியல்மீ நிறுவனத்தின் 'ரியல்மீ C2'. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி, மே 31-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ அன்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையாகும் என கூறியுள்ளது. கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், இதற்குமுன் பலமுறை இம்மாதிரி ஃப்ளாஷ் சேலில் விற்பனையாகியுள்ளது. இரண்டு பின்புற கேமரா, மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர், அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ள இந்த ரியல்மீ C2, 8,000 ரூபாய்க்கு குறைந்த விலையில் உள்ள ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்.
ரியல்மீ C2: விலை!
இந்தியாவில் இந்த ரியல்மீ C2-வின் விலை, 5,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன், 2GB RAM + 16GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இதன் மற்றொரு வகையான 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட மற்றொரு வகை ரியல்மீ C2-வின் விலை 7,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன்கள், நீலம் (Diamond Blue) மற்றும் ப்ளாக் (Diamond Black) என இரு வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ நிறுவனங்களின் தளங்களில் இன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளாஷ் சேலில் விற்பனையாகவுள்ளது.
ரியல்மீ நிறுவனத்தின் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை மொபிவிக் (Mobiwik) கேஷ் பயன்படுத்தி பெற்றால் 10 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்வுள்ளது.
ரியல்மீ C2: சிறப்பம்சங்கள்!
இந்த ரியல்மீ C2-வில் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், 6.1-இன்ச் HD+ (720x1560 பிக்சல்கள்) திரையை கொண்டுள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த கேமராக்கள், 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா.
32GB அளவிலான செமிப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 256GB வரை சேமிப்பு அளவை கூட்டிக்கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில், 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v4.2 வசதி மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3.5mm ஹெட்போன் ஜேக் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்