இந்தியாவில் மீண்டும் 'ரியல்மீ C2' ஸ்மார்ட்போனின் ஃப்ளாஷ் சேல் நடைபெறவுள்ளது. இந்த ஃப்ளாஷ் சேல், இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ நிறுவனத்தின் இணையதளங்களில் விற்பனையாகவுள்ளது. ஸ்மார்ட்போன் உலகில் ரியல்மீ நிறுவனத்தின் எதிரி என கருதப்படும் ரெட்மீ நிறுவனம் 5,999 ரூபாயில் 'ரெட்மீ 7A' ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்திய நேரத்தில் இந்த விற்பனையை ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது. 'ரியல்மீ C2' ஸ்மார்ட்போன், 'ரெட்மீ 7A' ஸ்மார்ட்போனிற்கு நேரடி எதிரியாக அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்கள் உள்ளே!
ரியல்மீ C2: விலை!
இந்தியாவில் இந்த ரியல்மீ C2-வின் விலை, 5,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன், 2GB RAM + 16GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இதன் மற்ற இரண்டு வகைகளான 2GB RAM + 32GB சேமிப்பு அளவு மற்றும் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ C2 ஸ்மார்ட்போன்களின் விலை 6,999 ரூபாய் மற்றும் 7,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்கள், நீலம் (Diamond Blue) மற்றும் ப்ளாக் (Diamond Black) என இரு வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ நிறுவனங்களின் தளங்களில் விற்பனையாகவுள்ளது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக விளங்கும் ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் ஜூன் 4 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு, 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 5,999 ரூபாய், 6,199 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Matte Black), நீலம் (Matte Blue), மற்றும் தங்கம் (Matte Gold) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 11 தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
ரியல்மீ C2: சிறப்பம்சங்கள்!
இந்த ரியல்மீ C2-வில் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், 6.1-இன்ச் HD+ (720x1560 பிக்சல்கள்) திரையை கொண்டுள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த கேமராக்கள், 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா.
32GB அளவிலான செமிப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 256GB வரை சேமிப்பு அளவை கூட்டிக்கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில், 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v4.2 வசதி மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3.5mm ஹெட்போன் ஜேக் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்