Realme 5s இன்று பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளது. விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது மற்றும் ஆர்வமுடன் அதை வாங்குவோர் ஈ-காமர்ஸ் தளத்தில் முன்பே பதிவுசெய்து முகவரி மற்றும் கட்டண விவரங்களை நிரப்பலாம். Realme 5s கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் Realme 5s-ன் விலை, விற்பனை சலுகைகள்:
குறிப்பிட்டுள்ளபடி, பிளிப்கார்ட்டில் மட்டும் மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்குகிறது. Realme.com-ல் உள்ள Realme 5s (Review) விற்பனை டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும். இந்த போன் பிளிப்கார்ட்டில் Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்தியாவில் Realme 5s-ன் 4GB RAM 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதன் higher-end 4GB RAM 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 10,999-யாக விலைக்குறியீட்டைக் கொண்டுள்ளது.
பிளிப்கார்ட்டில் Realme 5s வெளியீட்டு சலுகைகளில் no-cost EMI ஆப்ஷன்ஸ், ரூ. 9,250 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடு, HDFC வங்கி டெபிட் கார்டுதாரர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக், பிளிப்கார்ட் Axis வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக், Axis Bank Buzz கிரெடிட் கார்டுடன் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி, SBI கிரெடிட் கார்டு மூலம் EMI வாங்கினால் அதே சமமான தள்ளுபடியும் இதில் அடங்கும்.
Realme 5s-ன் விவரக்குறிப்புகள்:
டூயல் சிம் (நானோ) Realme 5s, ColorOS 6 உடன் Android Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 89 percent screen-to-body ratio உடன் மற்றும் Corning Gorilla Glass 3+ protection ஆகியவற்றுடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
Realme 5s-ல் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், அவை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்ககூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இது 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்.
Realme 5s, f/1.8 aperture உடன் 48-megapixel primary snapper-ஐ குவாட் ரியர் கேமரா அமைப்பில் உள்ளடக்கியுள்ளது. 119-degree (±1.5-degree) field of view மற்றும் f/2.25 aperture உடன் 8-megapixel wide-angle shooter, f/2.4 aperture உடன் 2-megapixel macro lens மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel portrait கேமரா ஆகியவை உதவுகிறது. முன்பக்கத்தில், 13-megapixel selfie snapper உள்ளது. இது HDR, AI Beautification மற்றும் Time Lapse அம்சங்களை ஆதரிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்