Photo Credit: FPTShop
Realme 5i போனை ஜனவரி 6-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதாக ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த போன் முதலில் வியட்நாமில் அறிமுகம் செய்யப்படும். ஆனால், அது எப்போது இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு வரும் என்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை. கூடுதலாக, போன் அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக ஒரு ஈ-காமர்ஸ் தளங்களில் பதிவு செய்ய பட்டியலிடப்பட்டுள்ளது. இது அதன் விலை மற்றும் செயல்பாட்டின் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது. மைப்போடு இரண்டு புதிய வண்ண விருப்பங்களில் வரும்.
அதிகாரப்பூர்வ Realme வியட்நாம் பேஸ்புக் பக்கம் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது. ஜனவரி 5-ஆம் தேதி Realme 5i நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், தொடங்குவதற்கு முன்பு, Realme 5i வியட்நாமிய இ-காமர்ஸ் தளமான FPTShop-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் தற்போது VND 4,290,000 (சுமார் ரூ. 13,000) விலையில் பதிவு செய்யப்படுகிறது.
விவரக்குறிப்புகள் பற்றி பேசுகையில், Realme 5i, waterdrop notch உடன் 6.52-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று பட்டியல் பக்கம் கூறுகிறது. இது 4GB RAM 64GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
இந்த போனில் 12-megapixel பிரதாக கேமரா, 8-megapixel wide-angle கேமரா, 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro shooter ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். முன்பக்கத்தில் 8-megapixel selfie snapper உள்ளது. Realme 5i-யில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். மேலும், ColorOS 6.0.1 உடன் Android Pie-யில் இயங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்