'ரியல்மீ 3i' முதன்முறையாக இந்தியாவில் அறிமுகமானது. ரியல்மீ X ஸ்மார்ட்போனுடன் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ரியல்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன், சமீபத்தில் அறிமுகமான 'ரெட்மீ 7A' ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக அறிமுகமாகியுள்ளது. இரண்டு பின்புற கேமரா,டியூட்ராப் திரை, மீடியாடெக் ஹீலியோ P60 எஸ் ஓ சி ப்ராஸசர், 4,230mAh பேட்டரி, 13 மெகாபிக்சல் கேமரா என பல சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவில் அறிமுகமான மற்றொரு 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு (Diamond Black), நீலம் (Diamond Blue), மற்றும் சிவப்பு (Diamond Red) என மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 23 அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.
ரியல்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு அறிமுகமாகியுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டியூட்ராப் நாட்சுடன் 6.22-இன்ச் திரை, 19:9 திரை விகிதம், 88.30 சதவிகித திரை-உடல் விகிதம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியொ P60 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,230mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G, வை-பை, ப்ளூடூத் v4.2, ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்