ரியல்மி நிறுவனத்தின் தயாரிப்பான ரியல்மி 2 ப்ரோ இந்தியாவில் நிரந்திர வலை குறைப்பை பெற்றுள்ளது. இந்த விலை தள்ளுபடி எல்லா ரியல்மி 2 ப்ரோ போன்களுக்கும் பொருந்தும். ரியல்மி நிறுவனம் வழங்கும் 'யோ டேஸ் சேல்' வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில் ரியல்மி நிறுவனம் சார்பில் இந்த புதிய தள்ளுபடி வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்கப்படுகிறது.
இந்த ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் தனது அறிமுக விலையில் இருந்து குறைந்து தற்போது ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனம் சார்பில் இம்மாத துவக்கத்தில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்போனிற்கும் விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை:
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விலை தள்ளுபடிக்கு பிறகு ரியல்மி 2 ப்ரோ போனின் 4ஜிபி ரேம்+ 64ஜிபி சேமிப்பு வசிதியுடைய ஸ்மார்ட்போன் மாடல் ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம்+ 64ஜிபி சேமிப்பு வசிதியுடைய மாடல், 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியுடைய மாடல் போனுகளும் விலை குறைந்து ரூ.13,990 மற்றும் ரூ.15,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த தயாரிப்பை ஃபிளாப்கார்ட் தளத்தில் முன்னரே பணத்தை செலுத்தி வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.1000 தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.
ரியல்மி 2 ப்ரோ அமைப்புகள்:
டூயல் சிம்-கார்டு வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மென்பொருள் கொண்டு இயங்குகிறது. 6.3 இஞ்ச் திரை மற்றும் ஹெச்டி திரையை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 660 AIE SoC கொண்டு செயல்படுகிறது. 8ஜிபி ரேம் அமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி மற்றும் 128ஜிபி என இரண்டு வகை சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளது.
இரண்டு கேமரா வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 16 மற்றும் 2 மெகா பிக்சல் சென்சார்களை கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்காக முன்புறத்தில் 16 மெகா பிக்சல் சென்சார் கேமராவை கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் 3,500mAh பேட்டரி மற்றும் பின்புற ஃபிங்கர்-பிரின்ட் சென்சார் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்