ரியல்மி 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 2 என்ற பெயரில் ரியல்மி தனது புதிய பவர் வங்கியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், நிறுவனம், ரியல்மி ஸ்மார்ட் டிவி, ரியல்மி வாட்ச் மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர் நியோ ஆகிய மூன்று தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரியல்மி 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 2-வின் விலை ரூ.999 ஆகும். இது கருப்பு மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டு வண்ணண்களில் கிடைக்கும். இந்த பவர் பேங்கின் விற்பனை இன்று பிற்பகல் 3 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் தொடங்கியுள்ளது. இந்த பவர் பேங்க் விரைவில் ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பவர் பேங்க் இரட்டை வெளியீட்டு போர்ட்டுகள், யூ.எஸ்.பி டைப்-ஏ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்களுடன் 18 வாட் டூ-வே விரைவு சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. பவர்பேங்கில் 10,000 எம்ஏஎச் உயர் அடர்த்தி அடர்த்தி கொண்ட லித்தியம்-பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 13 அடுக்கு சுற்று பாதுகாப்புடன் வருகிறது. இது அதிவேக சார்ஜிங்கின் போது கூட பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த பவர் பேங் யூ.எஸ்.பி-பி.டி மற்றும் குவால்காம் கியூசி 4.0 உடன் இணக்கமானது.
ரியல்மி 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 2, எல்.ஈ.டி இண்டிகேட்டர் லைட்டைக் கொண்டுள்ளது. இது பவர் பேங்கின் பேட்டரி அளவைக் காட்டுகிறது. பவர் பேங்கில் கருப்பு வேரியண்ட்டில் மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் வேரியண்ட்டில் கருப்பு நிறத்திலும் ரியல்மி பிராண்டிங் உள்ளது.
ரியல்மி 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 2 விற்பனை மே 25 மதியம் 3 மணி முதல் தொடங்க உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்