ஓப்போ ரெனோ 3 குளோபல் வேரியண்ட் மார்ச் 16-ல் வெளியாகிறது! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 12 மார்ச் 2020 12:53 IST
ஹைலைட்ஸ்
  • ஒப்போ ரெனோ 3-யின் உலகளாவிய வேரிய்ண்ட் மார்ச் 16-ல் அறிமுகப்படுத்தப்படும்
  • ஒப்போ ரெனோ 3, குவாட் ரியர் கேமராக்களைக் கொண்டிருக்கும்
  • நிறுவனம் பகிர்ந்த வீடியோ அரோரா ப்ளூ வேரியண்ட்டைக் காட்டுகிறது

ஓப்போ ரெனோ 3-யில் 44 மெகாபிக்சல் முன் கேமரா இருக்கலாம்

ஓப்போ ரெனோ 3 குளோபல் வேரியண்ட் மார்ச் 16-ஆம் தேதி இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் பேஸ்புக் பதிவு மூலம் தெரிவித்துள்ளது. போனின் அரோரா ப்ளூ வேரியண்ட் மற்றும் அதன் குவாட் பின்புற கேமராக்களைக் காட்டும் ஒரு குறுகிய டீஸர் வீடியோவுடன் இந்த பதிவு வருகிறது. பின்புற கேமராக்களைப் பற்றி பெருமை பேசும் ‘#StayClearInEveryShot' மற்றும் நாட்சிற்குள் செல்பி ஷூட்டர் என்று அது கூறுகிறது. ஓப்போ ரெனோ 3-யின் சர்வதேச பதிப்பாக இது இருக்கும், இது முன்னர் சீன சந்தையில் வெளியிடப்பட்டது.

ஓப்போ இலங்கையின் பேஸ்புக் பதிவு பின்வருமாறு கூறுகிறது, “#OPPOReno3-யின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு நாள் முழுவதும் உங்களுக்கு வசதியாக இருக்கிறது. #StayClearInEveryShot மார்ச் 16 அன்று துவங்குகிறது! ” வீடியோ சில தெளிவற்ற படங்களைக் காட்டுகிறது, ஆனால், கேமராக்களின் செயல்திறனில் கவனம் செலுத்துகிறது என்பது தெளிவாகிறது. ஓப்போ ரெனோ 3-யின் சமீபத்திய விவரக்குறிப்புகள் கசிவிலிருந்து, போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செல்ஃபி ஷூட்டர் 44 மெகாபிக்சல்கள் ஆகும். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட சீன வேரியண்ட்டுடன் ஒப்பிடுகையில், கேமராக்களில் சிறிது வித்தியாசம் உள்ளது, ஏனெனில் இது 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 2 மெகாபிக்சல் டெப்த் மோனோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன் கேமரா 32 மெகாபிக்சல்கள் ஆகும்.

சீன வேரியண்ட் MediaTek Dimesity 1000L SoC-யால் இயக்கப்படுகிறது. Oppo ரெனோ 3-யின் சர்வதேச வேரியண்ட் MediaTek Helio P90 SoC-ஐக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தையது 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளது, அடுத்து வெளியாகவிருப்பது அந்த இணைப்பு விருப்பத்தைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வேரியண்டுகளும் 4,025mAh-ல் ஒரே பேட்டரி திறனைக் கொண்டுள்ளன என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஓப்போ ரெனோ 3-யின் சர்வதேச வேரியண்ட்டின் அறிமுகம் இன்னும் காத்திருக்கையில், நிறுவனம் ஏற்கனவே, இந்தியாவில் Oppo Reno 3 Pro 128ஜிபி வேரியண்ட்டை ரூ.29,990-க்கும், 256 ஜிபி மாடலை ரூ.32,990-க்கும் அறிமுகப்படுத்தியது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Oppo Reno 3 Specifications, Oppo Reno 3, Oppo Reno 3 pro
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.