'ஓப்போ ரெனோ 10x ஜூம்': என்ன விலை, சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன்!

'ஓப்போ ரெனோ 10x ஜூம்': என்ன விலை, சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன்!

'ஓப்போ ரெனோ 10x ஜூம்'

ஹைலைட்ஸ்
  • ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் கொண்டுள்ளது இந்த 'ஓப்போ ரெனோ 10x ஜூம்'
  • 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
  • இதனுடன் 'ஓப்போ ரெனோ' ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்பட்டது
விளம்பரம்

ஓப்போ நிறுவனம், முதன் முதலாக இந்த 'ஓப்போ ரெனோ 10x ஜூம்' ஸ்மார்ட்போனை கடந்த மே 28-ஆம் தேதியன்று, புது டெல்லியில் ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. இதனுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ ரெனோ ஸ்மார்ட்போனுடன் இணைந்து, இந்த இரு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 7-ல் இந்தியாவில் முதன்முதலில் விற்பனைக்கு வந்தது. முதலில் அமேசான் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த இந்த ஸ்மார்ட்போன், தற்போது நாடு முழுவதும் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக தெனிந்தியாவை குறிவைத்து நடத்தகொண்டிருக்கும் இந்த விற்பனையில், தமிழகம் முதன்மை வகிக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 3000 மற்றும் சென்னையில் மட்டும் 1000 விற்பனைப் புள்ளிகள் அமைத்திருக்கிறது ஓப்போ நிறுவனம். மேலும், ஸ்மார்ட்போன் பழுது பார்க்கும் சேவைக்காக 20 பிரத்யேக ஓபோ எக்ஸ்பீரியன்ஸ் கன்சல்டண்ட்ஸ் பிரிவையும் அமைத்துள்ளது.

இது குறித்து ஓபோ இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குனர் சார்ல்ஸ் வோங்க் கூறுகையில், "பகுதிக்கு பகுதி மாறுபடும் வகையில் பல்வகை வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. அதனால், சந்தை விற்பனையின் அடிப்படையை புரிந்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.  எங்களின் வளர்ச்சிப் பாதைக்கு தென் இந்தியா பெரிதும் பாங்காற்றியுள்ளது. அதனால், அந்த பகுதி வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமையை வழங்கி ஒபோ நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.' என்று கூறினார்.

oppo 3

'ஓப்போ ரெனோ 10x ஜூம்': விலை

மொத்தம் இரண்டு வகைகளில் அறிமுகமாகி விற்பனையில் உள்ளது, இந்த 'ஓப்போ ரெனோ 10x ஜூம்'. 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு அளவு என இரு வகைகளை கொண்டுள்ளது இந்த 'ஓப்போ ரெனோ 10x ஜூம்' ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் 39,990 ரூபாய் என்ற விலையிலும், 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் 49,990 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமானது. 

முதலில் அமேசானில் விற்பனையான இந்த ஸ்மார்ட்போன், தற்போது அமேசான், ஃப்ளிப்கார்ட் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் ஆப்-லைன் கடைகளிலும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனுடன் அறிமுகமான 'ஓப்போ ரெனோ' ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்டு 32,990 ரூபாய் விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

oppo 2

'ஓப்போ ரெனோ 10x ஜூம்': சிறப்பம்சங்கள்

6.6-இன்ச் FHD+ திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. 

3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். முதன்மையாக 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் அளவிலான டெலிபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா என முன்று விதமான கேமராக்கள். மேலும், இதன் முன்புறத்தில் சைட்-ஸ்விங் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

பேட்டரி அளவை பற்றி பேசுகையில் 4,065mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது.

'ஓப்போ ரெனோ': சிறப்பம்சங்கள்

6.4-இன்ச் FHD+ திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. 

2 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். முதன்மையாக 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான இரண்டு விதமான கேமராக்கள். மேலும், இதன் முன்புறத்தில் சைட்-ஸ்விங் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

3,765mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo Reno 10x Zoom, Oppo Reno 10x Zoom Edition, Oppo, Oppo Reno
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »