இந்தியாவில் ஓப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் தனது முந்தைய விலையான 45,990 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் வெளியீட்டை தொடர்ந்து இந்த திடீர் விலைகுறைப்பு அமலாக்கப்பட்டுள்ளது.
6.4 இஞ்ச் ஹெச்டி திரை, 25 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் மூன்று பின்புற கேமராக்களுடன் இந்த போன் வெளியானது.
இந்த புதிய விலை தள்ளுபடியுடன் ஓப்போ ஆர் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசானில் (ரூ.39,990)க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் எக்ஸ்சேஞ்ஜ் முறையில் போன் வாங்குபவர்களுக்கு ரூ.13,400 வரை தள்ளுபடி அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எமரால்டு பச்சை மற்றும் ரேடியன்ட் மிஸ்ட் நிறங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓப்போ ஆர்17 ப்ரோ அமைப்புகள்:
ஆண்டுராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் வசதியை கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்டது போல் 6.4 இஞ்ச் திரைகொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸ்சரால் இயங்குகிறது.
மேலும் அமோலெட் திரை மற்றும் 8ஜிபி ரேம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12/20 மெகா பிக்சல் சென்சாரும், 1.4 மைக்ரான் பிக்சல் சென்சாரும் கொண்டுள்ளது. முன்புற செல்ஃபி கேமராவை பொருத்தவரை இந்த ஆர் 17 ப்ரோ தயாரிப்பு ஸ்மார்ட்போன் 25 மெகா பிக்சலை கொண்டுள்ளது.
128ஜிபி சேமிப்பு வசதி, 3,700mAh பேட்டரி வசதி மற்றும் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜர் போன்ற பல முன்னனி அமைப்புகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்